உத்தர பிரதேச மாநிலம், ஜலான் பகுதியைச் சேர்ந்தவர் லீலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). சுர்க்கி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள மருத்துவமனையில் ஒன்றில் செவிலியராக பணியாற்றி வரும் இவர், தனது கணவருடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று, இவர் வழக்கம் போல் வேலைக்கு சென்றுள்ளார். அப்போது, அவர் எதிர்பாராத விதமாக நான்கு பேர் கொண்ட கும்பல், இவரை வழிமறித்து, அருகில் உள்ள காட்டிற்குள் இழுத்து சென்றுள்ளனர். அங்கு அவரை 2 பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும், அந்த பெண்ணின் அந்தரங்க உறுப்பில் கடுமையாக தாக்கி, மிளகாய் பொடியை தூவி கடும் சித்ரவதை செய்துள்ளனர். இதனால் லீலா, கதறி துடித்துள்ளார். பின்னர், அந்த கும்பல் அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளனர்.
பின்னர், தனக்கு நடந்த கொடுமைகளை பற்றி தனது கணவரிடம் கூறியுள்ளார். இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்த கணவர், சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீசார் கூறியது, “பெண் தாக்கப்பட்டதாக தகவல் கிடைத்ததும், ஒரு குழு சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட பெண்ணை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றது. அந்தப் பெண் அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு ஆணுடன் தொடர்பு இருந்த நிலையில், அவர் தான் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து அவரை தாக்கியுள்ளனர். நாங்கள் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறோம்” என்றனர். தனது மனைவியின் கள்ள உறவை பற்றி அறிந்த கணவர், பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.