சென்னை கமிஷனர் அலுவலகம் முன்பு இளம் பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியது.
சென்னை புரசைவாக்கம் பகுதியைச் சார்ந்தவர் சைலஜா இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. இந்நிலையில் நேற்று தனது இரண்டு குழந்தைகளுடன் சென்னை கமிஷனர் அலுவலகம் வந்த அவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தன் இரண்டு குழந்தைகளோடு சேர்ந்து தீ குளிக்க முயன்றார். இதனால் கமிஷனர் அலுவலகத்தில் பதற்றம் உருவானது. இதனைப் பார்த்து அங்கிருந்த காவல்துறையினர் வேகமாக ஓடிச் சென்று சைலஜாவையும் அவரது குழந்தைகளையும் காப்பாற்றினர். பின்னர் அவரிடம் விசாரணையை மேற்கொண்டனர் காவல்துறை அதிகாரிகள். அந்த விசாரணையின் போது பல திடுக்கிட்டு உண்மைகளைகாவல்துறையினரிடம் விவரித்திருக்கிறார் சைலஜா.
அவரது கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்துக்கொண்டு இவரையும் இவரது குழந்தைகளையும் அடிக்கடி கொடுமை செய்து வந்திருக்கிறார் மேலும் அவர்களைக் கொன்று விடுவதாகவும் மிரட்டி இருக்கிறார். அரசியல் கட்சி ஒன்றில் முக்கிய பிரமுகராக இருக்கும் அந்த நபர் தன்னை எதுவும் செய்ய முடியாது எனவும் தனது மனைவியிடம் மிரட்டி இருக்கிறார். இது தொடர்பாக சைலஜா பலமுறை கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்ற போதும் காவல் நிலைய அதிகாரிகள் புகாரை வாங்க மறுத்துவிட்டனர்.
இதனால் விரத்தி அடைந்த அவர் இன்று கமிஷனர் அலுவலகம் முன்பு தனது இரண்டு மகள்களுடன் தீக்குளிக்கும் என்றதாக தெரிவித்திருக்கிறார். இதனை அடுத்து அவரை சமாதானம் செய்த காவல்துறை அதிகாரிகள் அவரது கணவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சைலஜா கொடுக்கும் புகாரை பெற்றுக் கொள்கிறோம் என்று உறுதியளித்து அவரையும் அவரது மகள்களையும் வேப்பேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் நேற்று சென்னை கமிஷனர் அலுவலகத்தில் பதற்றமாக காணப்பட்டது.