நாளொன்றுக்கு பல கடத்தல் சம்பவங்களும் நம் நாட்டில் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. அவ்வகையில் வெளிநாட்டிலிருந்து கேரளாவுக்கு வருபவர்கள், மூலம் தங்கம் அதிக அளவில் கடத்தப்படுகிறது. சுங்கத்துறை அதிகாரிகள் கடந்த எட்டு மாதங்களுக்குள், கொச்சி நெடும்பாசேரி விமான நிலையத்தில், 25 பெண்களை இது சம்பந்தமாக கைது செய்துள்ளனர்.
கடத்தல் செய்யும் பெண்கள் பல நூதன யுக்திகளை கையாளத் தொடங்கிவிட்டனர். தற்போது சானிட்டரி நாப்கினிலும் தங்கத்தை உருக்கி பேஸ்டாகவோ அல்லது கம்பியாகவோ மாற்றி கடத்துகின்றனர்.
கைப்பை, லேப்டாப், செல்போன், உள்ளாடைகள், அழகு சாதன பொருட்கள், பேன்சி நகைகள், மாத்திரைகள் என்று அனைத்திலும் தங்கத்தை மறைத்து வைத்து கடத்துகின்றனர்.
வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு வரும் பெண்களைக் குறி வைத்து, ஒரு பெரிய மாஃபியா கும்பலே இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை அறிந்த சுங்க அதிகாரிகள், குற்ற செயலில் ஈடுபட்டவர்களை பிடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.