மகளிர் உதவி மையம் ’181’ திட்டம் பற்றிய விழிப்புணர்வு 25ம் தேதி தொடங்குகின்றது.
181 மகளிர் உதவி மையம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 25ம் தேதி முதல் டிசம்பர் 10ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் 181 மகளிர் உதவி மையத்தின் திட்டத் தலைவர் ஷ்ரின் பாஸ்கோ, டிஜிட்டல் மீடியா நிபுணர் கிஷோர் தேவா மற்றும் டிஜிட்டல் மீடியா இயக்குனர் மெரின் ஆகியோரை சந்தித்துப் பேசினார்.
நவம்பர் 25ல் தொடங்க உள்ள இந்த 181 மகளிர் உதவி மையம், பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் கொண்டாடப்படுகின்றது. இதற்காக விழிப்புணர் ஏற்படுத்த 25முதல் டிசம்பர் 10 வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. இதை ஒட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 181 மகளிர் உதவி மையத்தின் திட்டத் தலைவர் ஷரின் பாஸ்கோ சந்தித்து பேசினார். அப்போது பெண்ணியம் போற்றுவோம் 2022 என்ற தலைப்பில தமிழகம் முழுவதும் அந்த மையம் நடத்தவுள்ள நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளனர்.
தமிழக அரசின்’181’ மகளிர் உதவி மையம் பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய 24 மணி நேரமும் செயல்படும் ரகசிய சேவை மையம். குடும்ப பிரச்சனை உள்ளிட்ட வன்றைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு காவல்துறை, மருத்துவத்துறை, சட்ட உதவி, மன நல ஆலோசனை போன்ற அத்தியாவசிய சேவைகள் வழங்கப்படுகின்றன.
இலவச தொலைபேசி எண்ணான 181 முதன் முதலில் டெல்லியில் தொடங்கப்படட்து. கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா, கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து மத்திய அரசு ஏற்படுத்திய நிதி ஒதுக்கீட்டின் கீழ் மகளிருக்கு இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது.முதலில் டெல்லி பின்னர் குஜராத், மும்பை, ஐதராபாத் என விரிவுபடுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் 2018 முதல் இச்சேவை செயல்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.