fbpx

மகளிர் உரிமை தொகை! விண்ணப்பம் ஏற்கப்பட்டதா? ரிஜக்ட் ஆனதா?… மெசேஜ் வரலயா?… 2 நாட்கள் காத்திருங்கள்!… தமிழ்நாடு அரசு!

மகளிர் உரிமை தொகை பெற விண்ணப்பம் ரிஜக்ட் ஆனதா இல்லையா என்பது குறித்த மெசேஜ் அவர்கள் விண்ணப்பத்தில் கொடுத்த நம்பருக்கு செப்டம்பர் 18-ம் தேதி முதல் அனுப்பி வைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஏழை எளிய பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் சென்று சேரும் வகையில் மகளிர் உரிமை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.இந்த திட்டத்தில் ரூ.1000 பெற விண்ணப்பதாரர்களின் தகுதிகள் சரிபார்க்கப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டன. இரண்டு கட்டங்களாக இதற்காக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதில் விடுபட்டவர்களுக்கு சிறப்பு முகாம் வழியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அரசானையில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளை பூர்த்தி செய்யாத விண்ணப்பங்களும், தகுதியில்லாத விண்ணப்பங்களும் ஏற்கப்படவில்லை. ரூ.2.5 லட்சத்துக்கும் அதிகமாக வருமானம் ஈட்டும் குடும்பங்கள், கார் மற்றும் கனரக வாகனங்கள் வைத்திருப்போர், ஆண்டுக்கு 3,600 யூனிட்டுக்கு மேல் மின் நுகர்வு கொண்ட குடும்பங்களில் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களும் விதிகள் படி நிராகரிக்கப்பட்டு உள்ளன.

இந்தநிலையில், இதனால் விண்ணப்பித்தும் தொகை வராதவர்கள் குழப்பத்தில் உள்ளனர். விண்ணப்பதாரர்களின் விண்ணப்பம் ரிஜக்ட் ஆனதா என்பது குறித்த மெசேஜ் அவர்கள் விண்ணப்பத்தில் கொடுத்த நம்பருக்கு செப்டம்பர் 18-ம் தேதி முதல் அனுப்பி வைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தேர்வு செய்யப்பட்ட ஒருசிலருக்கு காலதாமதமாக கூட வங்கிக்கணக்குக்கு தொகை வரலாம் என்பதால் இரு தினங்கள் அவர்கள் காத்திருப்பது நல்லது.

Kokila

Next Post

2000 ரூபாய் நோட்டுகளை இனி யாரும் மாற்ற முடியாது!… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Sat Sep 16 , 2023
இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி கடந்த மே மாதம் அறிவித்த நிலையில் பொதுமக்கள் 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. தற்போது பொதுமக்கள் வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்து மாற்றி வரும் நிலையில் இந்த பணியை மேற்கொள்ள செப்டம்பர் 30-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அமேசான் நிறுவனம் 2000 ரூபாய் […]

You May Like