fbpx

ரெடி…! இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் பெண்களுக்கு ரூ.25,000 மானியம்…! விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு…! முழு விவரம்…

தமிழ்நாடு வக்‌பு ‌ வாரியத்தில்‌ பதிவு செய்யப்பட்டு வக்‌பு நிறுவனங்களில்‌ பணியாற்றும்‌ உலாமாக்களுக்கு புதிய வாகனங்கள்‌ வாங்க மானியம்‌ வழங்கும்‌ திட்டம்‌ செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் உள்ள பயனாளிகள் வாங்கும்‌ இருசக்கர வாகனத்தின்‌ கொள்ளளவு 125cc மிகாமலும்‌ வாகன விதிமுறை சட்டம்‌ 1998ன்படி பதிவு செய்ய வேண்டும்‌. இத்திட்டத்தின்‌ கீழ்‌ விண்ணப்பிக்கும்‌ தகுதியுள்ள நபருக்கு, இருசக்கர வாகனத்தின்‌ மொத்த விலையில்‌ 50% சதவீதம்‌ அல்லது வாகனத்தின்‌ விலையில்‌ ரூ.25,000 இதில்‌ எது குறைவோ அத்தொகையை மானியமாக வழங்கப்படும்‌.

மாவட்டத்திலுள்ள வக்‌பு‌ நிறுவனங்களில்‌ பணிபுரியும்‌ உலமாக்கள்‌ விண்ணப்பிக்கும்‌ நாளில்‌ குறைந்தபட்சம்‌ 5 ஆண்டுகள்‌ பணியாற்றியிருக்க வேண்டும்‌, தமிழகத்தை சார்ந்தவராகவும், 18 வயதிலிருந்து 40 வயதிற்குட்பட்டவராக இருத்தல்‌ வேண்டும்‌, விண்ணப்பிக்கும்‌ போது இரு சக்கர வாகனம்‌ ஓட்டும்‌ கற்றுணர்வுக்கான (LLR) சான்றிதழ்‌ பெற்றிருத்தல்‌ வேண்டும்‌, குறைந்தபட்ச கல்வி தகுதி 8-ம்‌ வகுப்பு (தேர்ச்சி அல்லது தோல்வி) இருத்தல்‌ வேண்டும்‌. மாவட்டத்தில்‌ பதிவு செய்யப்பட்ட 32 வக்‌பு‌ நிறுவனத்தில்‌ ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள்‌ மானிய உதவி கோரி விண்ணப்பிக்க கூடாது.

ஆதார்‌ அட்டை, வாக்காளர்‌ அடையாள அட்டை, குடும்ப அட்டை, வருமான சான்று, வயது சான்றிதழ்‌, புகைப்படம்‌, சாதி சான்று, புகைப்படம்‌ மாற்று திறனாளியாக உரிய அலுவலரிடம்‌ பெறப்பட்ட சான்று, ஓட்டுநர்‌ உரிமம்‌ அல்லது LLR, கல்வித்‌ தகுதி சான்றிதழ்‌ (குறைந்தபட்சம்‌ 8-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி), வங்கி கணக்கு எண்‌ மற்றும்‌ IFSC கூடிய வங்கி கண்ககு புத்தகத்தின்‌ பக்கம்‌ நகல்‌, சம்மந்தப்பட்ட முத்தவல்லியிடம்‌ எத்தனை ஆண்டுகள்‌ வக்‌ஃபுபில்‌ பணிபுரிந்தார்‌ என்பதற்கான சான்று பெற்ற மாவட்ட வக்‌பு கண்காணிப்பாளர்‌ மேலொப்பத்துடன்‌ சமர்பிக்க வேண்டும்‌ மற்றும்‌ வாகனம்‌ வாங்குவதற்கான விலைப்பட்டியல்‌, ஆகியவை இணைக்கப்பட வேண்டும்‌.

மானிய விலையில்‌ இரு சக்கர வாகனம்‌ வாங்க, தேவையான விவரங்கள்‌ மற்றும்‌ படிவத்தினை மாவட்ட ஆட்ரியரகத்தில்‌ அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்‌ நல அலுவலகத்தில்‌ படிவத்தினை நேரில்‌ பெற்று, அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன்‌ பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சிறுபான்மைமினர்‌ நல அலுவலர்‌, மாவட்ட ஆட்சியரகம்‌, சேலம் என்ற முகவரிக்கு தபால்‌ மூலமாகவோ அல்லது நேரிலோ சமர்ப்பிக்க வேண்டும்.

Vignesh

Next Post

மகிழ்ச்சி செய்தி...! மகளிர் உரிமைத்தொகை ரூ.1000... நாளை முதல் 16-ம் தேதி வரை சிறப்பு முகாம்...!

Fri Aug 4 , 2023
பெண்களின்‌ வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத்‌ தரத்தை உயர்த்தி, சமூகத்தில்‌ சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும்‌ கலைஞர்‌ மகளிர்‌ உரிமைத்‌ திட்ட விண்ணப்பங்களைப்‌ பதிவு செய்யும்‌ முகாமை தமிழ்நாடு முதலமைச்சர்‌ ஸ்டாலின்‌ 24.7.2023 அன்று தருமபுரி மாவட்டம்‌, தொப்பூர்‌ அரசு மேல்நிலைப்‌ பள்ளியில்‌ நடைபெற்ற விழாவில்‌ தொடங்கி வைத்தார்‌. விண்ணப்பப்‌ பதிவு முகாம்களை இரண்டு கட்டங்களாக நடத்தத்‌ திட்டமிடப்பட்டுள்ளது . முதற்கட்டமாக 20,765 நியாய விலைக்‌ கடைகளில்‌ இருக்கும்‌ குடும்ப அட்டைகளுக்கு 24.07.2023 […]

You May Like