ஆராய்ச்சி மானியம் மற்றும் நிதிக்கான சிறப்பு மகளிர் இணையதளத்தை மத்திய அரசு தொடங்க உள்ளது.
மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, ஆராய்ச்சி மானியம் மற்றும் நிதிக்கான சிறப்பு மகளிர் இணையதளத்தை தொடங்கி வைத்தார். இந்த இணையதளம் வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் செயல்படும்.
அறிவியல் மற்றும் பொறியியல் துறைகளில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளும். பெண் விஞ்ஞானிகள் மட்டுமே மானியம் பெறுவதற்கு தகுதி உடையவர்கள் என்றும் தெரிவித்தார். ஆராய்ச்சிக்கான உதவித்தொகை 25 லட்சம் முதல் 30 லட்சம் வரை வழங்கப்படும்.
2 கோடி பிரதமர் ஆவாஸ்-கிராமின் பயனாளிகளில் 68% பெண்கள் மற்றும் 23 கோடிக்கும் அதிகமான முத்ரா கடன்கள் பெண் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. NFHS-5 கணக்கெடுப்பின்படி, முதன்முறையாக, இந்தியாவில் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு 1,020 பெண்களாக உயர்ந்துள்ளது, என்றார்.