fbpx

#Breaking | மகளிர் டி20 கிரிக்கெட்..!! வங்கதேசத்தை துவம்சம் செய்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா..!!

ஆசிய விளையாட்டு மகளிர் டி20 கிரிக்கெட் தொடரின் அரையிறுதியில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது.

ஆசிய விளையாட்டு போட்டியில் வங்கதேச மகளிர் அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில், 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய வங்கதேச மகளிர் அணி 17 புள்ளி 5 ஓவர்களில் 51 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

தொடர்ந்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய மகளிர் அணி, வங்கதேச பந்துவீச்சை விளாசி தள்ளினர். அதிரடிய ஆடிய இந்திய அணி வெறும் 8 புள்ளி 2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 52 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது. நட்சத்திர வீராங்கனை ஷபாலி வர்மா 17 ரன்களும், ஜேமியா ரோட்ரிக்ஸ் 20 ரன்களும் விளாசி அணிக்கு வெற்றியை தேடி தந்தனர். இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள இந்திய அணிக்கு பாராட்டு மழை குவிந்து வருகிறது.

Chella

Next Post

ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்த பள்ளி மாணவனுக்கு, நேர்ந்த கொடூரம்....! நான்கு ஆசிரியர்கள் மீது முதல் தகவல் அறிக்கை....!

Sun Sep 24 , 2023
பள்ளி வகுப்பறையில் அமர்ந்திருந்த மாணவன் ஒருவர் எதிர்ச்சையாக சன்னல் வழியே வேடிக்கை பார்த்ததற்காக, நான்கு ஆசிரியர்கள் சேர்ந்து, அந்த மாணவனை கொடூரமாக தாக்கிய சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவம் டெல்லியில் நடைபெற்றுள்ளது. அதாவது, கடந்த 15ஆம் தேதி பாதிக்கப்பட்ட மாணவனின் தாய் இந்த சம்பவம் குறித்து, காவல் நிலையத்தில் புகார் வழங்கியிருக்கிறார். அந்த புகாரில் சென்ற 15ம் தேதி, யமுனா விஹார் பகுதியில் இருக்கின்ற ஒரு […]

You May Like