10 அணிகள் பங்கேற்கும் மகளிர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென்னாப்பிரிக்காவில் இன்று முதல் வரும் 26ஆம் தேதி வரை 17 நாட்கள் நடைபெற உள்ளது.
இன்று நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் சன் லூஸ் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி, சமாரி அட்டப்பட்டு தலைமையிலான இலங்கை அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. கேப் டவுன் நகரில் இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு போட்டி தொடங்க இருக்கிறது. 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் உலகக் கோப்பை தொடரில் இந்திய இளம் அணி சாம்பியன் பட்டம் வென்ற நிலையில், சீனியர் அணியும் கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்க உள்ளது.
மகளிர் உலககோப்பை அட்டவணையில், ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை ஆகிய அணிகள் குரூப் ஏ பிரிவிலும், இங்கிலாந்து, இந்தியா, ஐயர்லாந்து, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் குரூப் பி பிரிவிலும் இடம்பெற்றுள்ளன. இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை நாளை மறுநாள் சந்திக்கிறது. இந்த போட்டி தென்னாப்பிரிக்காவில் உள்ள நியூலாண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் மாலை 6.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்திய அணி வீராங்கனைகள்:
ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா, யாஸ்திகா பாட்டியா, ரிச்சா கோஷ், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்லீன் தியோல், தீப்தி ஷர்மா, தேவிகா வைத்யா, ராதா யாதவ், ரேணுகா தாக்கூர், அஞ்சலி சர்வானி, பூஜா வஸ்த்ரகர், ராஜி ஷிகாயக் பன்.
இந்திய அணி போட்டி விவரங்கள்:
பிப்ரவரி 12 – இந்தியா – பாகிஸ்தான்
பிப்ரவரி 15 – வெஸ்ட் இண்டீஸ் – இந்தியா
பிப்ரவரி 18 – இந்தியா – இங்கிலாந்து
பிப்ரவரி 20 – இந்தியா – அயர்லாந்து
பிப்ரவரி 23 – முதலாவது அரையிறுதி
பிப்ரவரி 24 – இரண்டாவது அரையிறுதி
பிப்ரவரி 26 – இறுதிப்போட்டி