fbpx

ஒருநாளைக்கு ஒருமணி நேரம் தான் வேலை!… ஆண்டுக்கு ரூ.1.2 கோடி சம்பளம்!… கூகுள் நிறுவனம்!

ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் மட்டுமே வேலை செய்யும் நபருக்கு வருடத்திற்கு 1.2 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்படுவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது

இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி காலத்தில் தேடுபொறி என்றாலே அனைவரும் கூகுள் குரோம் தான் பயன்படுத்துகிறார்கள். இணையப் பயனர்களை கூகுள் ஒருபோதும் ஏமாற்றியதில்லை. கூகுளில் எதைத் தேடினாலும் அதற்கான பதில் கிடைத்துவிடும். வாட்ஸ் அப், பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என எல்லா விதமான இணையவாசிகளின் புகலிடமாக கூகுள் இருக்கிறது. இந்த வெற்றி அவ்வளவு சாதாரணமாக கூகுளுக்குக் கிடைக்கவில்லை. தொடக்கம் முதலே புதுப்புது அப்டேட்டுகளால் வளர்ந்து வருகிறது google நிறுவனம். இதற்காக உலகில் உள்ள தலைசிறந்த சாப்ட்வேர் இன்ஜினியர்களை தேடித் தேடி நிறுவனம் பணியமர்த்துகிறது. அப்படி கூகுள் நிறுவனத்தில் பணியமர்த்தப்பட்டவர் தான் டெவான். அவருக்கு ஆண்டு சம்பளம் 1.5 லட்சம் அமெரிக்க டாலர்கள். இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட 1 கோடியே 20 லட்சம் ரூபாய்.

இந்த சம்பளத்திற்காக அவர் எத்தனை மணி நேரம் வேலை செய்வார் என நினைக்கிறீர்கள்? ஒரு நாளைக்கு வெறும் ஒரு மணி நேரம் மட்டும்தான் அவருக்கு வேலை. அதன்படி பார்த்தால் கூகுள் நிறுவனத்தில் ஒரு மணி நேரத்திற்கு அவர் 33,000 சம்பளம் பெறுகிறார். இவர் கூகுளின் ஜென்சி மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார். கூகுள் நிறுவனத்திற்கான கோடிங் எழுதுவது இவரது வேலை. எப்பொழுதும் வழக்கமாக மதியம் தான் வேலை செய்ய அமர்வதாகவும், அதிகப்படியான வேலை செய்யாமல் அதிக ஊதியம் பெறும் டெக் ஊழியர்களில் தானும் ஒருவன் என டெவான் தன்னைக் குறிப்பிட்டுள்ளார்.

கடுமையாக வேலை செய்வதை விட திறமையாக வேலை செய்வதை நம்பும் டெவான், தனது நண்பர்களுடன் இணைந்து புதியதாக பொறியியல் நிறுவனம் ஒன்றையும் உருவாக்கி வருகிறார். சாப்ட்வேர் இன்ஜினியர்களைப் பொறுத்த வரை கூகுள் நிறுவனத்தில் வேலை பார்ப்பதே அவர்களின் கனவாக இருக்கும். ஏனென்றால் அங்கு அவர்களுடைய வேலைக்கு ஏற்ற சம்பளமும் பல சலுகைகளும் அதிகம் கிடைக்கும்.
இந்நிலையில் தினசரி ஒரு மணி நேரம் மட்டுமே வேலை செய்து, ஒரு கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் இந்த நபர் பற்றிய செய்தி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Kokila

Next Post

gmail அக்கவுண்டுகளை நீண்ட நாள் பயன்படுத்தவில்லையா?... நிரந்தரமாக தடை செய்யப்படும்!

Mon Aug 28 , 2023
நீண்ட காலமாக பயன்பாட்டில் இல்லாத gmail அக்கவுண்டுகளை கூகுள் நிறுவனத்தின் புதிய டெலிட் பாலிசியின் கீழ் நிரந்தரமாக தடை செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கிட்டத்தட்ட 60 கோடிக்கும் அதிகமான நபர்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டைப் பயன்படுத்தி வருகின்றனர். ஏனென்றால் தற்போதைய இணைய உலகில் வங்கி சேவையில் தொடங்கி ஆதார் கார்டு சேவைகள் வரை ஜிமெயில் கணக்கு கட்டாயம் தேவைப்படுகிறது. இதனால் ஜிமெயில் கணக்குகள் பற்றி அதிகமாக தெரியாத நபர்களும் அதை […]

You May Like