fbpx

உலகக்கோப்பை பைனல் ஒருதலைப்பட்சமாக தான் இருக்கும்!… ஆஸி. கேப்டன் ஓபன் டாக்!

உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் மைதானம் ரசிகர்களால் நிரம்பி இருக்கும். ஆனால் ஆதரவு ஒருதலைப்பட்சமாக தான் இருக்கும் என்று ஆஸ்திரேலியா அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறியுள்ளார்.

13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 2வது அரையிறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதையடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் இந்திய அணியை எதிர்கொள்கிறது ஆஸ்திரேலியா. இந்தநிலையில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்றதையடுத்து பேசிய ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ், டக் அவுட்டில் அமர்ந்திருப்பதை விட வெளியே எழுந்து சென்று விடுவது நன்றாக இருக்கும் என்று தோன்றியது. இரண்டு மணி நேரங்கள் மிகவும் பதட்டமாக இருந்தது. ஆனால் அதற்கான பலன் கிடைத்ததில் மகிழ்ச்சி.

ஸ்டார்க் மற்றும் ஹேசில்வுட் இருவரும் தொடர்ச்சியாக அவ்வளவு ஓவர்கள் பேசும் அளவுக்கு நிலைமை இருக்கும் என்று தெரியவில்லை. கொஞ்ச நேரம் கழித்து பந்து ஆடுகளத்தில் சுழலப்போகிறது என்று எங்களுக்குத் தெரியும். மேகமூட்டம் இருந்ததால் நாங்கள் முதலில் பந்து வீசியதில் ஏமாற்றம் அடையவில்லை. நாங்கள் எங்கள் பீல்டிங் குறித்து பேசுகிறோம். ஆரம்பத்தில் அது சரியாக அமையவில்லை. ஆனால் இன்று மிகச் சிறப்பாக இருந்தது. 37 வயதான டேவிட் வார்னர் அபாரமாக செயல்பட்டார்.

முக்கியமான நேரத்தில் ஹெட் கிளாஸன் விக்கெட்டை கைப்பற்றினார். இங்லீஷ் மிகவும் தேவையான நேரத்தில், இரண்டு சிறந்த சுழற் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அருமையாக விளையாடி தன்னை நிலை நிறுத்தினார். எங்கள் அணியில் சிலர் நாங்கள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடிய அனுபவத்தை கொண்டிருக்கிறோம். இறுதிப் போட்டியில் மைதானம் ரசிகர்களால் நிரம்பி இருக்கும். ஆனால் ஆதரவு ஒருதலைப் பட்சமாகத்தான் இருக்கும். 2015 ஆம் ஆண்டு உலகக் கோப்பை எனது கிரிக்கெட் தொழில் வாழ்க்கையில் சிறப்பானது. இந்தியாவில் மற்றொரு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடுவேன் என்று நினைத்துப் பார்த்ததில்லை!” என்று கூறி இருக்கிறார்.

Kokila

Next Post

"ஒரு தடவை சொன்னா புரியாதா…" சிறுமிக்கு காதல் தொல்லை! அண்ணன் எடுத்த விபரீத முடிவு.!

Fri Nov 17 , 2023
காதலை கைவிடக் கூறியும் மறுத்து வந்ததால் இளைஞர் படுகொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் அண்ணன் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த தும்பேறி பகுதியைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவரது மகன் முரளி(22). கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில் முரளி அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவரை காதலித்து வந்ததாக […]

You May Like