fbpx

Wow!… சுற்றுலா செல்ல நவீன வசதிகளுடன் வாடகை கேரவன்கள்!… சமையலறை! சோபா பெர்த்!… குளிக்க சவருடன் கழிவறை!

கொரோனா பெருந்தொற்றால் மக்கள் அவதியடைந்த லாக்டவுன் சமயத்தில், பயணம் மற்றும் சாகசத்தின் மீதான ஆர்வத்தால் நண்பர்கள் ஹிமான்ஷு ஜாங்கிட், யோகேஷ் குமார் மற்றும் பிரணவ் ஷர்மா ஆகியோர் இணைந்து கார்வா என்ற நிறுவனத்தைதொடங்கியுள்ளனர். இந்த நிறுவனம் பயணத்திற்கு தேவையான கேரவனை வாடகைக்கு வழங்குகி வருகிறது. இந்த கார்வா கேரவனை நீங்கள் டெல்லியில் இருந்து எடுக்கலாம். இதன் மூலம் இந்தியா முழுவதும் பயணிகள் தங்களுடைய பயணத்தை தொடங்கலாம்.

நவீன வசதிகளுடன் கூடிய இந்த வாடகை கேரவனில், ஒரு எல்பிஜி சிலிண்டர், சமையலறை பாத்திரங்கள், ஒரு மினி ஃப்ரிட்ஜ், ஒரு பார்பிக்யூ கிரில் மற்றும் குடிநீர் ஆகியவற்றைக் கொண்ட ஒரு சமையலறை அடங்கியுள்ளன. இதுதவிர, சோபாபெர்த்கள், ரூஃப் டாப் மற்றும் படுக்கைகள் உள்ளன. படுக்கைகள் வாகன அளவுக்கேற்ப கிடைக்கும். குளிப்பது உள்ளிட்ட மனிதனின் அத்தியாவசிய தேவைக்கு திறந்த வெளியில் வெளியே பொருத்தக்கூடிய ஷவருடன் கூடிய மொபைல் கழிவறை அமைந்துள்ளன. மேலும், முகாம் கூடாரங்கள், முகாம் நாற்காலிகள், மடிக்கக்கூடிய மேஜை, ஏர் கண்டிஷனர், எல்இடி விளக்குகள், இன்வெர்ட்டர் வசதியுடன் இருக்கும். செலவு: ஓட்டுநர் கட்டணம் உட்பட ஒரு நாளைக்கு ரூ5,500. எரிபொருள் மற்றும் வரிகள் தனித்தனியாக இருக்கும்.

2.வான் கேரவன்: தொழில்துறை வடிவமைப்பாளரான மோக்ஷா காந்தியின் தனிப்பட்ட திட்டமாக இந்த கேரவன் தொடங்கப்பட்டது. 2021 இல் அகமதாபாத்தை தளமாகக் கொண்ட கேரவன் வாடகை நிறுவனத்தின் பெயர் வான். இவர்களின் வாகனங்கள் அனைத்தும் சூரிய சக்தியில் இயங்கும் வாகனங்கள் என்பது குறிபிடத்தக்கது. இந்த வாகனத்தில் ஆறு முதல் எட்டு பேர் வரை அமரலாம், நான்கு முதல் ஐந்து பெரியவர்கள் தூங்கலாம். குளிர்சாதனப்பெட்டி, சிங்க், சமையல் பாத்திரங்களுடன் கூடிய முழு வசதியுள்ள சமையலறை. பெரிய படுக்கை அறைகள் மற்றும் குளியலறை. டிவி, மடிக்கக்கூடிய புரொஜெக்டர் மற்றும் புளூடூத் ஸ்பீக்கர் அமைப்பு. நான்கு நாற்காலிகள் மற்றும் ஒரு மேஜையுடன் கூடிய வெளிப்புற இருக்கைகள். முதலுதவி பெட்டி மற்றும் தீயை அணைக்கும் கருவியுடன் கூடிய பாதுகாப்பு உபகரணங்கள் இதில் உள்ளன. செலவு: ஓட்டுநர் கட்டணம் உட்பட ஒரு நாளைக்கு ரூ12,000 ஆகும். எரிபொருள் மற்றும் வரிகள் தனித்தனியாக இருக்கும்.

காரவாண்டர் : பயணத்தின் போது செல்லப் பிராணிகளுக்கு ஏற்றவாறு உள்ள கேரவனைத் தேடுகிறீர்களானால், Carawander சிறந்த தேர்வு. ஆறு மற்றும் எட்டு பேர் வரை இதில் பயணிக்கலாம். இதில் குளிர்சாதனப் பெட்டி, மைக்ரோவேவ், கெட்டில், காபி மெஷின்கள், ஜெனரேட்டர்கள் மற்றும் நைட் விஷன் கேமராக்கள் போன்ற அம்சங்களுடன் வாகனங்கள் வருவதால், சலசலப்பு இல்லாத சாகசத்திற்கு ஏற்றதாக இருக்கும். செலவு : ஓட்டுநர் மற்றும் உதவியாளர் கட்டணம், எரிபொருள், கட்டணம் மற்றும் வரிகள் உட்பட ஒரு நாளைக்கு ரூ.20,000 வசூலுக்கப்படுகிறது.

கேரவன் கேரளா: செப்டம்பர் 2021 இல், அதன் கேரவன் சுற்றுலாக் கொள்கையின் ஒரு பகுதியாக, கேரள சுற்றுலாத்துறை சொகுசு கேரவன்களை சுற்றுலாப் பயணிகளுக்காக அறிமுகப்படுத்தியது. கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் கேரளாவின் இணையற்ற அழகை சாலை வழியாக கேரவனில் அமர்ந்து நீங்கள் ரசிக்கலாம் . இதில், குளிர்சாதனப்பெட்டி, மைக்ரோவேவ் மற்றும் இண்டக்ஷன் குக்டாப் அடங்கிய சமையலறை. வெந்நீருடன் குளியலறை மற்றும் உள் கழிவறை. சோபா-கம்-படுக்கைகள். வைஃபை மற்றும் ஜிபிஎஸ் வசதி. கேரளா மாநிலம் முழுவதிலும் உள்ள அங்கீகாரம் பெற்ற உள்ளூர் சுற்றுலா ஆபரேட்டர்கள் மூலம் வாடகைக்கு கிடைக்கின்றன, இதன் கட்டணம் தேவைக்கேற்ப மாறும்.

லக்ஸ் கேம்பர்: பெங்களூருவை தளமாகக் கொண்ட இந்த நிறுவனம் கர்நாடகாவைச் சுற்றிப் பார்க்கக்கூடிய பேகேஜ்களை வழங்குகிறது. இந்த கேரவன் இரண்டு படுக்கையறைகளைக் கொண்ட 200 சதுர அடி இடத்தை கொண்டுள்ளது. வைஃபை, ஜிபிஎஸ் டிராக்கிங் மற்றும் பாதுகாப்பிற்காக அவசரகால வெளியேற்ற வசதி கொண்டுள்ளது. வாகனத்திற்கு நாள் ஒன்றுக்கு நான்கு பெரியவர்களுக்கு ரூ.3,500 முதல் தொடங்குகிறது. முகாம்களுக்கான அணுகலுடன் கூடிய இரண்டு நாள் பயணத் திட்டங்களுக்கு ரூ.32,000 வசூலிக்கப்படுகிறது. ஓட்டுநர் கட்டணம், எரிபொருள், பாத்திரங்கள் வாடகை மற்றும் உணவு தனித்தனியாக வசூலிக்கப்படுகிறது

Kokila

Next Post

Tn govt: 10-ம் வகுப்பு முதல் டிகிரி படிக்கும் நபர்களுக்கு கல்வி உதவித்தொகை...! எப்படி விண்ணப்பிப்பது...?

Wed Oct 25 , 2023
10-ம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை தமிழக அரசு தரும் உதவித் தொகை பெறுவதற்கு தற்போது விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்; தமிழ்நாடு முழுவதும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொகை பெற அந்தந்த மாவட்டங்களில் விண்ணப்பிக்கலாம். இந்த தொகையைப் பெறுவதற்கு பொதுப்பிரிவு இளைஞர்களுக்கு தங்கள் கல்வித்தகுதியைப் பதிவு செய்து 5 வருடங்களும், […]

You May Like