fbpx

இன்று முதல் பயன்பாட்டிற்கு வரும் மஞ்சள் நிற பேருந்துகள்… முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைக்கிறார்…

தமிழகத்தில் தற்போது அரசு போக்குவரத்து கழகங்களால் இயக்கப்படும் மாநகர பேருந்துகள் நீல நிறங்களிலும், சிவப்பு நிறங்களிலும் இயங்கி கொண்டிருக்கின்றன. அதேபோல் பெண்களுக்கு கட்டணமில்லா சேவை வழங்கும் பேருந்துகளை அடையாளம் காணும் வகையில் முன், பின் பக்கங்களில் பிங்க் நிற வண்ணம் பூசப்பட்டு இயங்கி வருகிறது.

முன்னதாக சட்டப்பேரவையில், அரசு போக்குவரத்து கழகத்துக்கு 1000 புதிய பேருந்துகளை வாங்கவும், 500 பழைய பேருந்துகளை புதுப்பிக்கவும் ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து தமிழகம் முழுவதிலும் உள்ள எட்டு கோட்டங்களில் உள்ள சேதமடைந்த பேருந்துகளை சீரமைக்கும் பணியில் போக்குவரத்து துறை ஈடுபட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக பழைய வண்ணம் மாற்றப்பட்டு புதிய மஞ்சள் மற்றும் வெளிர் மஞ்சள் நிறத்துக்கு பேருந்துகள் தயாராகி வருகிறது. மேலும் பேருந்துகளின் இருக்கை, அமரும் வசதி போன்றவை விரிவாக இருக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் முதல்கட்டமாக 100 பேருந்துகள் இன்று முதல் பயன்பாட்டுக்கு வர உள்ளன.

மஞ்சள் நிறம் பூசப்பட்டு பயன்பாட்டிற்கு வரும் பேருந்துகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். சென்னை, பெங்களூரு, திருச்சி, கரூரில் ஆகிய பகுதிகளில் புதிய பேருந்துகள் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

Kathir

Next Post

செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடித்தால், இவ்வளவு நன்மையா…..?

Fri Aug 11 , 2023
முற்காலத்தில், சமையல் செய்வதும், தண்ணீர் பருகுவதும் என அனைத்து விதமான செயல்களுக்கும் மண்பாண்டங்களை தான் பயன்படுத்தினார்கள் .ஒரு காலத்தில், மண்பாண்டங்களில் நீர் வைத்து குடித்தால், அதன் சுவையே தனியாக தெரியும். மேலும் வெயில் காலத்தில் தற்போதும், இந்த மண்பாண்டங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அந்த வகையில், தற்போது நாம் செம்பு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து பருகினால், என்ன விதமான நன்மைகள் உடலுக்கு ஏற்படும்? என்பதை அறிந்து கொள்ளலாம் வாருங்கள். பெரும்பாலும் எல்லோரும் நம்முடைய […]

You May Like