fbpx

”அதிமுகவின் 2ஆம் பாகத்தை இனிதான் பார்க்க போகிறீர்கள்”..! ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி பரபரப்பு பேட்டி..!

அமைதியின் அடையாளம் ஓபிஎஸ் இனியும் அமைதியாக இருக்கமாட்டார் என்று புகழேந்தி தெரிவித்துள்ளார்.

சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் அதிமுகவின் முன்னாள் செய்தி தொடர்பாளரும், ஓபிஎஸ் ஆதரவாளருமான புகழேந்தி ஓபிஎஸ்ஸை சந்தித்து பேசினார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த புகழேந்தி, ”கடந்த 2017இல் காமராஜ் உணவுத்துறை அமைச்சராக இருந்தபோதே அவர் மீது ஊழல் புகார் கொடுத்தேன். திமுக ஆட்சிக்கு வந்த பின்னரும் டிவிஎஸ்-சிக்கு கடிதம் எழுதினேன். அதன் காரணமாக தற்போது சோதனை நடத்தப்படுகிறது.

V Pugazhendhi interview: 'OPS has no say in AIADMK, will be sidelined by EPS '

காமராஜ் என்ற பெயரை அவர் மாற்றிக்கொண்டால் நன்றாக இருக்கும். இந்த சோதனையிலிருந்து அவர் தப்பிக்கவே முடியாது. சோதனைக்காக தமிழக அரசை பாராட்டுகிறேன். காமராஜ் ரேஷன் துவரம் பருப்பு கிலோவுக்கு ரூ.15 முதல் ரூ.30 ரூபாய் வரை முறைகேடாக கொள்ளையடித்துள்ளார். அவருக்கு ரூ.60 கோடி வரை சொத்து மதிப்பு ஏறியுள்ளதாக ஊடகங்களில் செய்தி பார்த்தேன். ஆனால், 3.4 ஜீரோ சேர்க்க வேண்டும். அவரை விரைந்து சிறைக்கு அனுப்ப வேண்டும். அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் குறித்தும் விரைவில் புகாரளிப்பேன். அதிமுக பொதுக்குழு தொடர்பாக நல்ல தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கிறோம். எடப்பாடி தரப்பினர் பொதுக்குழு வேலைகளை நிறுத்தி விட்டு ஆங்காங்கே நடக்கும் ரெய்டை போய் பார்க்கவும். 4 ஆண்டுகால ஊழல் ஆட்சியை எடப்பாடி நடத்தியதால் தான் முன்னாள் அமைச்சர்கள் அவருக்கு ஆதரவாக இருக்கின்றனர்.

உயர் நீதிமன்றத்தை நாடிய ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ்.. திருப்பி அனுப்பிய  நீதிபதி.!! - Seithipunal

அமைதியின் அடையாளம் ஓபிஎஸ், அக்கிரமக்காரர் ஈபிஎஸ். கூட்டுக் களவானிகள் ஓபிஎஸை தனிமைப்படுத்தி வைத்திருந்ததால், அவரால் ஊழல் செயல்பாடுகளை கண்டிக்க முடியவில்லை. இனியும் ஓபிஎஸ் அமைதியாக இருக்க மாட்டார். பொதுக்குழுவில் பாட்டில் வீசி அவமதித்த பிறகும் அவர்களை எதிர்கொண்டு பேசிவிட்டு வெளியேறினார். எங்க வீட்டுப் பிள்ளை படத்தைப் போல், அதிமுகவின் இரண்டாம் பாகத்தை இனிதான் பார்க்க போகிறீர்கள். இனி பலருக்கு அடி விழுகும்”. இவ்வாறு அவர் கூறினார்.

Chella

Next Post

நடு ரோட்டில் உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஓடிய இளைஞர்.... பட்டாகத்தியுடன் ஓட ஓட விரட்டிய ரவுடி கும்பல்...!

Fri Jul 8 , 2022
காஞ்சிபுரத்தில் ரவுடி கும்பல் ஒன்று‌ கையில் பட்டாக்கத்தியுடன் வாலிபர் ஒருவரை விரட்டிச்சென்ற சம்பவம் நேற்று நடந்ததுள்ளது. அவர்களை கைது செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். காஞ்சிபுரத்திற்கு, கோயில், மற்றும் பட்டு புடவை வாங்குவதற்காகவும் பல பகுதிகளிலிருந்து மக்கள் வருவது வழக்கம் அதனால் எப்பொழுதும் காஞ்சிபுரம் சாலைகள் மக்கள் நடமாட்டம் அதிகம் காணப்படும் எனவே பொதுமக்களை பாதுகாக்க காவல்துறை ரோந்து வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் நேற்று பட்டப்பகலில் நான்கு பேர் […]
வரதட்சணை கேட்காமல் லட்சக்கணக்கில் புரோக்கர் கமிஷன்..!! திருமணம் முடிந்தும் சிங்கிளாக சுத்தும் இளைஞர்..!!

You May Like