உலகளவில் அதிக பயனர்களை கொண்ட வாட்ஸ்அப் நிறுவனம் முன்னணி மெசேஜிங் ஆப்-ஆக உள்ளது.. இந்தியாவில் கோடிக்கணக்கான பயனர்களை வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.. வாட்ஸ் அப் நிறுவனம் தனது பயனர்களின் வசதிக்காக பல்வேறு புதிய வசதிகளையும், அப்டேட்களையும் வழங்கி வருகிறது.. அந்த வகையில் விரைவில் ஒரு புதிய அம்சத்தை வாட்ஸ் அப் அறிமுகம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது..

இந்நிலையில் ஒரே நேரத்தில் 100க்கும் மேற்பட்ட படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பும் புதிய அம்சத்தை வாட்ஸ் அப் அறிமுகம் செய்துள்ளது.. இதன் மூலம் ஒரே செய்தியில் 100 புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பயனர்கள் அனுப்ப முடியும்.. இதற்கு முன்பு வரை, ஒரே நேரத்தில் அனுப்பக்கூடிய அதிகபட்ச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களின் எண்ணிக்கை 30 ஆக இருந்தது. இருப்பினும், புதிய அப்டேட் மூலம், பயனர்கள் ஒரே நேரத்தில் அதிக மீடியாவைப் பகிரும் வசதியை பெறுகின்றனர்..
மேலும், மற்றொரு புதிய அம்சத்தையும் வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.. தற்போது பயனர்கள் ஆவணங்களுக்கு (documents) தலைப்புகளை சேர்க்க முடியும்.. இதற்கு முன்பு, பயனர்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு மட்டுமே தலைப்புகளை எழுத முடியும், ஆனால் இப்போது தங்கள் தனிப்பட்ட மற்றும் குழு அரட்டைகளில் பகிரப்பட்ட ஆவணங்களுக்கு தலைப்புகளைச் சேர்க்கலாம். பயனர்கள் தங்கள் குழுக்களை சிறப்பாக விவரிக்க உதவும் வகையில் குழு விளக்கங்களுக்கான (descriptions) எழுத்து வரம்பை WhatsApp விரிவுபடுத்தியுள்ளது. புதிய வரம்பை குறிப்பிடவில்லை என்றாலும், குழு சப்ஜெக்ட்களுக்கு 25 எழுத்துகள் மற்றும் விளக்கங்களுக்கு 512 எழுத்துகள் என்ற முந்தைய வரம்பை விட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய அம்சங்கள் தற்போது ஆண்ட்ராய்டுக்கான வாட்ஸ்அப்பில் மட்டுமே கிடைக்கின்றன.. விரைவில் இந்த அப்டேட்கள் iOS க்கு அறிமுகப்படுத்தலாம் என்று கூறப்படுகிறது..
இந்த புதிய அம்சங்கள் பயனர்கள் வாட்ஸ்அப்பில் மீடியா மற்றும் ஆவணங்களைப் பகிர்வதை எளிதாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குழு மற்றும் விளக்கங்களுக்கான எழுத்து வரம்பை விரிவுபடுத்துவது பயனர்கள் தங்கள் குழுக்களை சிறப்பாக விவரிக்க உதவும், மேலும் ஆர்வமுள்ள குழுக்களைக் கண்டுபிடித்து சேர்வதை எளிதாக்கும் என்று கூறப்படுகிறது.. மேலும் இந்த புதிய அம்சங்கள் வாட்ஸ்அப்பின் தளத்தை மேம்படுத்துவதிலும் பயனர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..