இடைத்தரகர் இன்றி அறுவடை இயந்திரங்கள் வாங்க ‘உழவன் செயலியை பயன்படுத்தலாம்.
விவசாயிகள் நெல் அறுவடையில் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். அறுவடை நேரத்தில் கூலி ஆட்கள் கிடைக்காததால் விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இது போன்ற நிலையை சரி செய்ய அறுவடை இயந்திரங்கள் வாடகைக்கு வழங்கப்பட்டு வருகின்றன. அறுவடை இயந்திரங்களுக்காக சில நேரங்களில், விவசாயிகள் இடைத்தரகர்களிடம் தள்ளப்படுவதால், தரகு கொடுத்து அறுவடை செலவு அதிகமாவதுடன் மொத்த வருமானமும் குறைகிறது.
இந்த பிரச்னையை தீர்க்க வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் அறுவடை இயந்திரங்களை, நேரடியாக உரிமையாளர்களிடமிருந்து பெற உரிமையாளர் பெயர், விலாசம், கைப்பேசி எண்ணுடன் மாவட்ட வாரியாக, வட்டார வாரியாக, உழவன் செயலியின் மூலம் ‘வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு’ என்ற முகப்பை தேர்வு செய்து ‘அறுவடை இயந்திரங்கள் பற்றி அறிய’ என்ற துணை முகப்பின் மூலம் உங்கள் மாவட்டத்தில் அதன் தொடர்புடைய வட்டாரத்தை உள்ளீடு செய்து தெரிந்துகொள்ள முடியும்.
விவசாயிகள் உழவன் செயலிக்குள் சென்று நேரடியாக உரிமையாளரை தொடர்புகொண்டு இடைத்தரகர் இன்றி நெல் அறுவடை இயந்திரங்களை பெற்று பயனடையலாம்.