ரேஷன் அட்டை வைத்திற்கும் நபர்களுக்கு தற்போது ஒரு வருடத்தில் 3 இலவச கேஸ் சிலிண்டர்கள் கிடைக்கும் வாய்ப்பை உத்தரகண்ட் மாநில பெற்றுள்ளனர். அரசின் இந்த முடிவால் மக்கள் பெரும் நிம்மதி அடைந்துள்ளனர். அதன் பலனை நீங்கள் எவ்வாறு பெறலாம் என்பதை பார்க்கலாம். நீங்கள் அந்தியோதயா திட்ட பயனாளியாக இருந்தால், உங்களுக்கு அரசால் இலவச கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும்.
இது குறித்து உத்தரகண்ட் மாநில முதலவர் புஷ்கர் சிங் தாமி அரசு வெளியிட்டுள்ள தகவலின்படி, ரேஷன் அட்டை வைத்திற்கும் நபர்களுக்கு ஆண்டுதோறும் மூன்று எல்பிஜி சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். இதனால் அரசுக்கு நிதிச்சுமை அதிகரிக்கும் என்றாலும், சாமானியர்களுக்குத்தான் பலன் கிடைக்கும். இந்த அறிவிப்புடன், அதில் சில விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளும் உள்ளன. அதன்படி, பயனாளி உத்தரகண்ட் மாநிலத்தில் வசிப்பவராக இருப்பது கட்டாயமாகும். இதற்கு அந்தியோதயா ரேஷன் அட்டைதாரர்கள் கேஸ் இணைப்பு அட்டையுடன் இணைப்பது அவசியம்.
இந்த திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பினால், உங்கள் அந்தியோதயா அட்டையை இந்த மாத இறுதிக்குள் இணைக்கவும். இணைக்கவில்லை என்றால், அரசின் இலவச கேஸ் சிலிண்டர் திட்டத்தில் இருந்து நீங்கள் பயன்பெற முடியாது. மாவட்ட வாரியாக அந்தியோதயா நுகர்வோர் பட்டியல் உள்ளூர் கேஸ் ஏஜென்சிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு, அந்தியோதயா கார்டு வைத்திற்கும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு கேஸ் இணைப்பை இணைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. அரசின் இந்த முடிவிற்குப் பிறகு, அந்த மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 2 லட்சம் அந்தியோதயா அட்டைதாரர்கள் பலனை பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.