fbpx

பகீர்.! திருமணமான 5 நாட்களில் கணவன் கொலை.! மணப்பெண் காதலனுடன் சேர்ந்து நிகழ்த்திய கொடூரம்.!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் திருமணமான 5 நாட்களில் கணவன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட நிலையில், காவல்துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

உத்திரப்பிரதேச மாநிலம் மாவ் மாவட்டத்தில் தோஹாரிகாட் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராமத்தில் லவ்குஷ் சௌகான்(24) என்ற இளைஞருக்கு பாயல் சௌகான் என்ற பெண்ணுடன் திருமணம் நடந்திருக்கிறது. இந்நிலையில் பாயல் திருமணத்திற்கு முன் தினேஷ் என்ற இளைஞரை காதலித்து வந்ததாக தெரிகிறது. இதனால் அவரது சம்மதத்தை மீறி அவருக்கு பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர்

இதனைத் தொடர்ந்து கடந்த 18ஆம் தேதி, பாயல் தனது காதலன் தினேஷ் மற்றும் அவரது நண்பர் உதவியுடன் தனது இளம் கணவரை கழுத்தை நெறித்து கொலை செய்திருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் கொலை நடைபெற்ற இடத்திற்கு விரைந்து வந்து இறந்த இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணையில் இறங்கினார்.

இதனையடுத்து இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய பாயலின் காதலன் தினேஷ் மற்றும் அவரது நண்பர் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர் . இவர்களுக்கு உடந்தையாக இருந்த புது பெண் பாயலும் கைது செய்யப்பட்டுள்ளார். திருமணம் முடிந்த 5 நாளில் கணவன், மனைவி மற்றும் அவரது காதலனால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

English Summary: In Uttarpradesh newly wedded bride murder her groom with the help her lover and his friend. Police arrest all the accused who involved in this gruesome murder.

Read more: https://1newsnation.com/news-about-kiradu-temple-mystery-in-rajasthan/

Next Post

Ayodhya: ராமர் கோவிலுக்கு படையெடுக்கும் அரசியல்வாதிகள்!… திடீரென அலைமோதும் மக்கள் கூட்டம்!… ஏன் தெரியுமா?

Tue Feb 20 , 2024
Ayodhya: அயோத்தி ராமர் கோவிலில் கடந்த ஜனவரி 22ம் தேதி கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. அதன்பின்னர் ஜனவரி 23ம் தேதியில் இருந்து காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை அயோத்தி ராமர் கோயிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் நாள்தோறும் பிற்பகல் 12.30 மணி முதல் 1.30 மணி வரை ஒரு மணி நேரம் கோயில் நடை அடைக்கப்படும் எனத் […]

You May Like