சென்னை எண்ணுறைச் சேர்ந்த 28 வயது இளம் பெண் பட்டதாரி ஒருவருக்கு கடந்த 2019 ஆம் வருடம் தண்டையார்பேட்டை பகுதியில் இருந்த ஒரு மருத்துவரிடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்ற போது இளம் பெண்ணுக்கும் மருத்துவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறி உள்ளது.
அதன் பிறகு இருவரும் வாட்ஸப் மூலமாக சேட்டிங் லாங் டிரைவ் போன்றவற்றில் ஈடுபட்டு வந்தனர். அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்த மருத்துவர் நெருக்கமாக இருக்க தொடங்கி இருக்கிறார்.
இந்த நிலையில் தான் சமீப காலமாக பெண்ணிடம் உரையாற்றுவதை அந்த மருத்துவர் திடீரென்று நிறுத்தி இருக்கிறார். இதனால் அந்த பெண்ணுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அவரிடம் விசாரித்ததில் அந்த மருத்துவர் அந்த பெண் உடனான உறவை தொடர ஆர்வம் காட்டவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் மருத்துவர் தொடர்ந்து அழுத்தம் கொடுத்துள்ளார். அப்போது அந்த மருத்துவர் தன்னிடம் நெருக்கமாக இருந்த அந்தரங்க புகைப்படங்கள் இருக்கின்றன. அதனை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டி இருக்கிறார்.
ஆகவே அந்த பெண் தன்னுடைய பெற்றோரிடம் இது பற்றி தெரிவித்துள்ளார் அவர்கள் காலநிலையத்தில் புகார் அளித்தனர். அதற்குள்ளாக அந்த மருத்துவர் வேறு ஒரு பெண் மருத்துவரை திருமணம் செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது. இத்தகைய நிலையில் அந்த இளம் பெண் தன்னிடம் இருந்த வாட்ஸ் அப் உரையாடல், ஆடியோ ஆதாரங்கள், புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை காவல்துறையினரிடம் ஆதாரமாக கொடுத்திருக்கிறார்.
ஆனால் தன் மீது பழி வந்துவிடக்கூடாது என்பதற்காக காவல் துறை விசாரணையை நடத்துவதற்கு மருத்துவர் முயற்சிகளாகவும் அதற்காக இதுவரையில் சுமார் 10 லட்சம் ரூபாய் செலவு செய்து இருப்பதாகவும் அந்த பெண்ணின் தரப்பினர் புகார் வழங்கியுள்ளனர். பெண்ணின் புகாரை தொடர்ந்து, மருத்துவர் மீது மோசடி ஏமாற்றுதல் மிரட்டுதல் தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.