fbpx

Youtube..!! இனி யூடியூபில் ஸ்டோரீஸ் போட முடியாது..!! அதிரடியாக நீக்கும் கூகுள் நிறுவனம்..!! ஷாக்கில் யூடியூபர்ஸ்..!!

யூடியூபில் ஸ்டோரீஸ் என்ற வசதி நீக்கப்பட உள்ளதாக, கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

கூகுள் நிறுவனத்தில் பிரபலமான செயலியாக அறியப்பட்டும் யூடியூப்பில் (Youtube), ஸ்டோரீஸ் என்ற வசதி கடந்த 2017ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் யூடியூப் பயனர்கள் தாங்கள் என்ன வீடியோவை பதிவேற்றுகிறோம் என்பதை, முன்னோட்டமாக அறிவிப்பதாக ஸ்டோரீஸ் என்ற வசதி பயன்படுத்தப்பட்டது. குறிப்பாக பத்தாயிரம் அல்லது அதற்கு மேற்பட்ட சந்தாதாரர்களை கொண்டிருக்கும், யூடியூபர்களுக்கு மட்டுமே இந்த பிரத்யேக வசதி வழங்கப்பட்டு வந்தது.

இதில் போதிய வரவேற்பு கிடைக்காத காரணத்தால், இந்த வசதியை யூடியூப் செயலில் இருந்து ஜூன் 26ஆம் தேதி முதல், நீக்கப்போவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்நிலையில், ஏற்கனவே உருவாக்கப்பட்டிருந்த ஸ்டோரீஸ்களும், அடுத்த மாதம் 26ஆம் தேதியில் இருந்து 7 நாட்களுக்குள் நீக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த ஸ்டோரிஸ்களுக்கு பதிலாக, கம்யூனிட்டி போஸ்ட் அல்லது ரீல்ஸ் வழியாக, யூடியூபர்கள் தங்களது கதைகளை தெரிவிக்கலாம் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஸ்டோரீஸ் வசதியை நீக்குவதன் மூலம் like Shorts, Community posts, live videos போன்றவற்றை அதிகம் பேர் பயன்படுத்துவார்கள் என்பதால், அந்த வசதிக்கு தடை விதிப்பதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

Chella

Next Post

கள்ளகாதலுக்கு இடையூறாக இருந்த காதலியின் கணவனை போட்டுத்தள்ளிய இளைஞர்…..! மகாராஷ்டிராவில் அதிர்ச்சி சம்பவம்…..!

Thu Jun 1 , 2023
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே உள்ள கந்தி வாலி பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ்சவான் (32) இவர் நகை கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில், கடந்த 28ஆம் தேதி அன்று அவர் மர்மமான முறையில் சுட்டு கொலை செய்யப்பட்டார். இவருடைய உடலை கைப்பற்றிய காவல் துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்களும் கிடைத்துள்ளது. அதாவது மனோஜ்க்கு உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ஒரு இளம் பெண்ணுடன் […]

You May Like