பிரிட்டனில் டெக்ஸாமெத்தாசோன் என்ற மருந்து கொரோனா வைரஸ் நோய் தொற்றுக்கு தீர்வாக அமையும் என மருத்துவ ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அழிவை ஏற்ப்படுத்தி வரும் சூழலில் பல நாடுகளும் அதற்கான மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் முக்கிய திருப்பமாக தற்போது பிரிட்டன் மருத்துவ குழு டெக்ஸாமெத்தாசோன் என்ற மருத்து இதற்கு தீர்வாக இருக்கும் என கண்டறித்துள்ளது.

இது வரை பல நாடுகளும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் என்ற மருந்தை பயன்படுத்தி வந்தது. இருப்பினும் அதினால் எதிபார்க்கும் முன்னேற்றம் இல்லை எனவும் பக்க விளைவுகள் உள்ளதாகவும் மருத்துவர்கள் பலர் கருத்து தெரிவித்து வந்தனர். இருப்பினும் ஹைட்ராக்ஸி குளோரோகுயினை பல விவாதத்துக்கு மத்தில் உலக சுகாதாரத்துறை பரிந்துரை செய்தது.

இந்த நிலையில் பிரிட்டன் மருத்துவ குழு தங்கள் ஆராய்ச்சியில் டெக்ஸாமெத்தாசோன் என்ற மருந்தை கண்டுபிடித்துள்ளது. இதற்க்கான நடத்தப்பட முதற்கட்ட ஆய்வில் 5ல் 4 நபர்கள் குணமடைவதாக கண்டற்றியப்பட்டுள்ளது. விரைவில் இது உயர்கட்ட பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு அதிகாரப்பூர்வமாக வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.