மாட்டிறைச்சி மூலம் புதிதாக பரவும் நோய்…! உயிருக்கே ஆபத்து…! உடனே இந்த தடுப்பூசி போட வேண்டும்.‌‌..!

புருசெல்லோசிஸ்‌ எனும்‌ கன்று வீச்சு நோய்‌ பாக்டீரியா கிருமிகளால்‌ கால்நடைகளுக்கு ஏற்படும்‌ ஒரு நோயாகும்‌. இந்நோய்‌ மாடு, ஆடு போன்ற அசையூட்டும்‌ பிராணிகள்‌, நாய்‌, குதிரைகளிலும்‌ ஏற்படும்‌. ஆடு மற்றும்‌ மாடுகளில்‌ இந்நோய்‌ கன்று வீச்சு, இறந்த நிலையில்‌ கன்று அல்லது குட்டி பிறத்தல்‌, நலிந்த கன்றுகள்‌, நச்சுக்கொடி விழாமல்‌ தங்குதல்‌, பால்‌உற்பத்தி குறைதல்‌ போன்றவற்றை ஏற்படுத்தும்‌.

நாட்டின மாடுகளில்‌ கருச்சிதைவு ஏற்பட்டு விரைந்து தொற்றும்‌ தன்மை கொண்டது. இந்நோய்‌ கால்நடைகளிலிருந்து மனிதர்களுக்கும்‌ தொற்று நோயாகும்‌. இந்த நோய்‌ கால்நடைகளோடு நெருங்கி பழகும்‌ விவசாயிகள்‌, கால்நடை மருத்துவர்கள் மற்றும்‌ துறைப்பணியாளர்கள்‌, இறைச்சி கடைகளில்‌ பணிபுரிவோர்‌, ஆராய்ச்சி பணியாளர்கள்‌ மற்றும்‌ கால்நடைகள்‌ மூலம்‌ கிடைக்கும்‌ பால்‌ மற்றும்‌ இறைச்சி நுகர்வோர்‌ ஆகியோர்களை தாக்கும்‌ அபாயம்‌ உள்ளது.

இந்நோயினால்‌ பாதிக்கப்பட்ட கால்நடைகளின்‌ சுத்திகரிக்கப்படாத பால்‌ மற்றும்‌ இறைச்சி பொருட்களை உட்கொள்வதாலும்‌, நோயினால்‌ பாதிக்கப்பட்ட மாடுகளின்‌ சுரப்புகள்‌ மற்றும்‌ உயிர்கழிவுகளோடு தொடர்பு ஏற்படும்‌ போதும்‌ நோய்‌ பரவிடும்‌ வாய்ப்பு உள்ளது. இந்நோய்‌ மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவும்‌ வாய்ப்பு சூறைவு.

மனிதர்களில்‌ இந்நோய்‌ எலும்பு மற்றும்‌ மூட்டு அழற்சி, தண்டுவட எலும்புகளில்‌ அழற்சி, கல்லீரல்‌ நோய்‌, வயிறு மற்றும்‌ குடல்களில்‌ அழற்சி, இனப்பெருக்க உறுப்புகளில்‌ அழற்சியை ஏற்படுத்தும்‌. சில நேரங்களில்‌ இந்நோய்‌ நரம்பு மண்டலத்தில்‌ பாதிப்பு , கண்கள்‌ மற்றும்‌ இதயத்திலும்‌ பாதிப்பு ஏற்படுத்தும்‌. சில நேரங்களில்‌ இறப்பும்‌ ஏற்படும்‌.

கால்நடைகளில்‌ இந்நோய்‌ தடுப்பதற்காக 14,50,000 டோஸ்கள்‌ தடுப்பூசி மருந்துகள்‌ வரப்பெற்று தருமபுரி மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறையில்‌ இருப்பில்‌ வைக்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில்‌ 28.02.2023 முடிய நடைபுபறும்‌ தடுப்பூசி முகாம்களில்‌ 4 மாத வயது முதல்‌ 8 மாதவயது முடியவுள்ள கிடேரி கன்றுகளுக்கு மட்டும்‌ தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.தடுப்பூசி செலுத்தப்படும்‌ கிடேரி கன்றுகளுக்கு அடையாள காது வில்லைகள்‌பொருத்தப்படும்‌. இந்த தடுப்பூசி ஒருமுறை செலுத்தப்பட்‌டால்‌ வாழ்நாள்‌ முழுவதும்‌எதிர்ப்புத்திறனை வெளிப்படுத்தும்‌.

எனவே, கால்நடை வளர்ப்போர்‌ அருகிலுள்ள கால்நடை மருந்தகங்களை அணுகி தங்களிடம்‌ உள்ள 4 முதல்‌ 8 மாத வயதுள்ள கிடேரி கன்றுகளுக்கு தடுப்பூசி போட்டுக்கொண்டு தங்கள்‌ மாடுகளை கன்று வீச்சு நோயிலிருந்து பாதுகாத்து கொள்வதுடன்‌ மனிதர்களுக்கு இந்நோய்‌ கால்நடைகளிருந்து பரவாமல்‌ தடுக்க வேண்டுமென தருமபுரி மாவட்ட வலியுறுத்தி உள்ளார்.

Vignesh

Next Post

யோகி ஆதித்யநாத் பிரதமர் பதவிக்கு குறி வைக்கிறாரா..? அவரே சொன்ன பதில்..

Sun Feb 5 , 2023
பிரதமர் நரேந்திர மோடிக்கு தற்போது 72 வயதாகிறது.. அடுத்த ஆண்டு பொதுத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியை வழிநடத்த மோடி தயாராகிவிட்டார்.. எனவே அடுத்த ஆண்டு தேர்தலிலும் மோடி தான் பிரதமர் வேட்பாளர் என்பது உறுதியாகிவிட்டது.. ஆனால் 2029-ம் ஆண்டில் மோடிக்கு 78 வயதாகிவிடும்.. பாஜகவின் கொள்கை படி, 75 வயதுக்கு மேற்பட்டோருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடையாது.. எனவே வயது காரணமாக மோடி பிரதமர் பதவிக்கு போட்டியிடவில்லை எனில், […]

You May Like