பட்ஜெட் 2024 | புதிய தொழில் தொடங்க வட்டியில்லா கடன்..!! விவசாயம், பால் உற்பத்தியை பெருக்க நடவடிக்கை..!!

நாடாளுமன்றத்தில் 2024ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து பேசிய அவர், 50 ஆண்டு காலத்திற்கு மாநிலங்களுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இதற்காக ரூ.77,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனைக் கொண்டு மாநிலங்கள் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. மாநில வளர்ச்சியில் மத்திய அரசு அதிக அக்கறை கொண்டுள்ளதாக பட்ஜெட் உரையில் அவர் தெரிவித்தார்.

மேலும், புதிய தொழில் தொடங்க வட்டியில்லா கடன் வழங்கப்படும். இதற்காக ரூ.1 லட்சம் கோடி முதலீட்டில் புதிய நிதியம் அமைக்கப்படவுள்ளது. இதனால், நாட்டில் புதிய தொழில்கள் அதிகரிக்கும். விவசாயம் மற்றும் பால் உற்பத்தியை பெருக்க வழிவகை செய்யப்படும் என்று அறிவித்தார்.

மேலும், பெருநகரங்களில் மெட்ரோ ரயில் சேவையை விரிவுபடுத்த முன்னுரிமை வழங்கப்படும். துறைமுகங்கள் மற்றும் தொழிற்சாலைகளை இணைக்கும் வகையில், 3 ரயில் வழித்தடங்கள் அமைக்கப்படும். 40,000 சாதாரண ரயில் பெட்டிகள், வந்தே பாரத் பெட்டிகளாக மாற்றப்படும் என்று தெரிவித்தார்.

1newsnationuser6

Next Post

"நண்பர்களுடன் பந்தயம்.." இளம்பெண்ணின் பிட்டத்தில் அடித்த இளைஞர்.! கைது செய்த போலீசார்.!

Thu Feb 1 , 2024
நண்பர்களுடன் வைத்த பந்தயம் காரணமாக ஒரு பெண்ணை பிட்டத்தில் அடித்ததற்காக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெங்களூரில் நடைபெற்று உள்ளது. நண்பர்களுடைய தூண்டுதலின் பெயராலேயே இதனைச் செய்ததாக அந்த இளைஞர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். கடந்த டிசம்பர் 30ஆம் தேதி, இரவு 7.30 மணி அளவில், பெங்களூரின் விஜயநகர் பகுதியில் உள்ள நம்மூதா ஹோட்டலில் சாந்தன் உட்பட இரு நண்பர்களும் அருவருக்கத்தக்க செயல்களில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் பெண்களை அநாகரிகமாக […]

You May Like