கட்டிட தொழிலாளி உருட்டு கட்டையால் அடித்து படுகொலை….!

வேலூர் சித்தேரி பகுதியை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி பிரகாஷ் (26) ,அதே பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன்( 40) இவர் பிளக்ஸ் பேனர் கடை நடத்தி வருகின்றார். நடந்து முடிந்த மாநகராட்சி வார்டு தேர்தலில் 59வது வார்டில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக கட்டிட தொழிலாளி பிரகாஷும், ராமகிருஷ்ணனும் போட்டியிடுவதற்கு வாய்ப்பு கேட்டனர் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை பிரகாசுக்கு வாய்ப்பு கொடுத்து விட்டு ராமகிருஷ்ணனை புறக்கணித்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக, பிரகாஷின் மீது ஆத்திரத்தில் இருந்த ராமகிருஷ்ணன் சுயேசையாக போட்டியிட்டார். ஆனாலும் அந்த தேர்தலில் பிரகாஷ், ராமகிருஷ்ணன் உள்ளிட்ட இருவருமே தோல்வியை சந்தித்தனர். அதன்பிறகு பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து விலகிய ராமகிருஷ்ணன் திமுகவில் இணைந்த இந்த சூழ்நிலையில் தேர்தல் போட்டி காரணமாகவும், ஊர் கோவில் கும்பாபிஷேகத்தின் போது ஏற்பட்ட மோதல் காரணமாகவும் பிரகாசுக்கும், ராமகிருஷ்ணனுக்கும் இடையில் விரோதம் ஏற்பட்டு வந்துள்ளது.

இருவருக்கும் இடையே அவ்வப்போது தகராறு, வாக்குவாதம் உள்ளிட்டவை ஏற்பட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. நீங்கள் தான் நேற்று தொரப்பாடி பெரியார் பொறியியல் கல்லூரி அருகே பிரகாஷ் இருசக்கர வாகனத்தில் போய்க்கொண்டிருந்தபோது பின் தொடர்ந்து சென்று அவரை மடக்கிப் பிடித்த ராமகிருஷ்ணன், தான் வைத்திருந்த உருட்டு கட்டையால் பிரகாஷின் தலையில் பலமாக அடித்து கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

இது தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த டிஎஸ்பி திருநாவுக்கரசு மற்றும் பாகாயம் காவல்துறையினர் பிரகாஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பிறகு காவல்துறையினர் விசாரணை செய்தனர். காவல்துறையினரின் விசாரணையில் அணைக்கட்டு அருகே ராமகிருஷ்ணன் பதுங்கி இருப்பது தெரியவந்தது. ஆகவே அந்த பகுதிக்கு சென்று ராமகிருஷ்ணனை கைது செய்தனர்.

இந்த கொலை சம்பவம் குறித்து ராமகிருஷ்ணன் விசாரணை செய்தபோது முன் விரோதம் காரணமாக, அவர் மீது தாக்குதல் நடத்தியதாகவும் இதன் காரணமாக, பிரகாஷ் உயிரிழப்பார் என்று எதிர்பார்க்கவில்லை எனவும் அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார். அதன் பிறகு ராமகிருஷ்ணனை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

Next Post

அரசியலமைப்புச் சட்டப்படி கடமையை சரியாக நிறைவேற்றுங்கள்….! ஜார்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு முதல்வர் வாழ்த்து…..!

Sun Feb 12 , 2023
ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக இருந்த ரமேஷ் ஃபயாஸ் மகாராஷ்டிரா மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். ஜார்கண்ட் மாநில ஆளுநராக தமிழக பாஜகவின் மூத்த தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டிருக்கிறார் மணிப்பூர் மாநில ஆளுநராக இருந்த இல.கணேசன் நாகாலாந்து மாநில ஆளுநராக இடமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார். குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த சூழ்நிலையில், ஜார்கண்ட் மாநில ஆளுநராக புதிதாக நியமனம் செய்யப்பட்டிருக்கிற சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தமிழக […]
மேயருக்கு மாதந்தோறும் ரூ.30,000..!! கவுன்சிலர்களுக்கு எவ்வளவு..? அதிரடி உத்தரவு பிறப்பித்த முதலமைச்சர்..!!

You May Like