மெகா வேலைவாய்ப்பு.. மொத்தம் 46,435 காலி பணியிடங்கள்.. SSC வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு…

கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான ஆட்சேர்ப்பு அறிவிப்பை பணியாளர் தேர்வு ஆணையம் ( Staff Selection Commission – SSC) வெளியிட்டுள்ளது. SSC கான்ஸ்டபிள் (GD- General Duty) தேர்வு 2022க்கான தற்காலிக காலியிடங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ssc.nic.in என்ற ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பட்டியலைச் சரிபார்க்கலாம். இந்த ஆட்சேர்பு நடவடிக்கை மூலம் மொத்தம் 46,435 காலி பணியிடங்கள் நிரப்பப்படும்.

எல்லைப் பாதுகாப்புப் படை (Border Security Force -BSF), மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) (entral Industrial Security Force -CISF), மத்திய ரிசர்வ் போலீஸ் படை (Central Reserve Police Force – CRPF), இந்தோ-திபெத் எல்லையில் கான்ஸ்டபிள் (Indo-Tibetan Border Police -ITBP) சஷாஸ்த்ரா சீமா பால் (Sashastra Seema Bal -SSB), செயலக பாதுகாப்புப் படை (Secretariat Security Force -SSF), அஸ்ஸாம் ரைபிள்ஸில் ரைபிள்மேன் (Rifleman in Assam Rifles) ஆகிய பதவிகளுக்கான ஆட்சேர்ப்புக்கான போட்டித் தேர்வை பணியாளர் தேர்வு ஆணையம் நடத்த உள்ளது. உள்துறை அமைச்சகம் மற்றும் பணியாளர்கள் தேர்வு ஆணையம் இடையே கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி தேர்வு நடைபெற உள்ளது..

தேர்வு முறை : கணினி அடிப்படையிலான தேர்வு (CBE), உடல் திறன் தேர்வு (PET), உடல் ரீதியான தரநிலைத் தேர்வு (PST) ஆகியவற்றில் செயல்திறன் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அதன்பின்னர் மருத்துவ பரிசோதனை, மற்றும் ஆவண சரிபார்ப்பு பணிகள் நடைபெறும்..

SSC கான்ஸ்டபிள் GD தற்காலிக காலியிடங்கள் பட்டியலை பதிவிறக்கம் செய்வது எப்படி?

  • பணியாளர் தேர்வு ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான ssc.nic.in ஐப் பார்வையிடவும்.
  • இணைப்பைத் தேடுங்கள்.
  • ஒரு புதிய PDF ஆவணம் திரையில் தோன்றும்.
  • பி.டி.எஃப்-ஐ பதிவிறக்கம் செய்து, எதிர்கால குறிப்புக்காக பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளலாம்.

Maha

Next Post

Wow...! நீங்களும் தொழில்‌ முனைவோர்‌ ஆகலாம்...! தமிழக அரசு வழங்கும் இலவச பயிற்சி...! வயது வரம்பு என்ன...? முழு விவரம்...

Sun Feb 12 , 2023
வரும் 15.02.2023 அன்று சென்னை தொழில்‌ முனைவோர்‌ மேம்பாடு மற்றும்‌ புத்தாக்க நிறுவன வளாகத்தில்‌ தொழில்‌ முனைவோர்க்கான விழிப்புணர்வு முகாம்‌ நடைப்பெற உள்ளது. இந்த முகாம்‌ காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம்‌ 1.30 மணி வரை நடைபெறும்‌. சுயமாக தொழில்‌ தொடங்க விரும்பும்‌ 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும்‌ இந்த முகாமில்‌ கலந்து கொள்ளலாம்‌. முதல் கட்டமாக, சொந்தமாக தொழில்‌ தொடங்குவதில்‌ உள்ள நன்மைகள்‌,தொழில்‌ வாய்ப்புகள்‌, தொழிலை தெரிவு […]

You May Like