#Breaking : சசிகலாவுக்கு கொரோனா பாசிட்டிவ்.. சி.டி ஸ்கேன் பரிசோதனையில் தகவல்.. மீண்டும் ஐ.சி.யூ.வில் சசிகலா.. இதுதான் அவருக்கு பிரச்சனை.. மருத்துவமனை வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்.. நாட்டு மக்கள் நாசமா போகட்டும்! தமிழக மக்கள் மீது சாபம் விட்ட பூமி இயக்குனர் சின்னப்பம்பட்டியில் நடராஜனுக்கு தட புடலான வரவேற்பு ! தேசிய கொடியுடன் வலம் வந்த யார்க்கர் நடராஜன் தெலங்கானாவில் தடுப்பூசி போட்டுக் கொண்ட நபர் மரணம்.. 18 மணி நேரத்தில் உயிரிழந்ததால் அதிர்ச்சி.. சசிகலா தற்போது எப்படி இருக்கிறார்..? டிடிவி தினகரன் கூறிய தகவல்.. இந்த நாட்டில் 12 வயது சிறுவர்கள் உடலுறவு கொள்ளலாம்.. பாலியல் குற்றங்களை தடுக்க நடவடிக்கை.. கொடூரம்.. தலித் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து உயிருடன் எரிக்க முயன்ற நபர்.. நடிகை மீனாவுடன் இணைந்து நடித்துள்ள பிக்பாஸ் பிரபலம்.. யார் தெரியுமா..? புகைப்படம் உள்ளே.. தடுப்பூசி போட்டுக் கொண்ட 12,000 பேருக்கு கொரோனா பாசிட்டிவ்.. அதிர்ச்சி தகவல்.. பாபநாசம் படத்தில் கமலின் 2-வது மகளாக நடித்த மீனுவா இது..? இப்படி எப்படி இருக்காங்க பாருங்க.. உங்கள் ஆதார் அட்டை செல்லுபடியாகுமா என்பதை எப்படி தெரிந்துகொள்வது..? விவரம் உள்ளே.. பேரறிவாளன் விடுதலை விவகாரம்.. ஒரே நாளில் நிலைப்பாட்டை மாற்றிய மத்திய அரசு சசிகலா வேறு மருத்துவமனைக்கு மாற்றம்.. இதுதான் காரணம்.. கொரோனாவிலிருந்து மீண்ட நோயாளிகளின் நுரையீரல் எப்படி இருக்கும்..? மருத்துவர் வெளியிட்ட தகவல்..

விவசாய கடன்?: ஆர்.பி.ஐ கட்டுப்பாட்டிற்கு செல்லும் கூட்டுறவு வங்கிகள்

அனைத்து கூட்டுறவு வங்கிகளையும் இந்திய ரிசர்வ் வங்கியின் கீழ் கொண்டுவர மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

கர்ப்பிணி யானையை

வீடியோ கான்பிரன்சிங் வாயிலாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசியவர், “இது புதிய இயல்பு எனவும், வாடிக்கையாளர்களுக்கு அவரது பணம் பாதுகாப்பானது என உறுதி செய்யப்படும்,” எனவும் அவர் கூறினார்.

மேலும், சுமார் 1,482 கோடி நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளும் 58 மல்டி-ஸ்டேட் கூட்டுறவு வங்கிகளும் சுமார் 8.6 கோடி வைப்புத் தொகையாளர்களைக் கொண்டுள்ளன.

பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு (பிஎம்சி) வங்கி நெருக்கடியை அடுத்து, 1,540 கூட்டுறவு வங்கிகளை இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கான வங்கி ஒழுங்குமுறை சட்டத்தில் திருத்தங்களை மத்திய அமைச்சரவை கடந்த பிப்ரவரியில் ஒப்புதல் அளித்தது.

தனது பட்ஜெட் உரையின் போது, ​​நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கூட்டுறவு வங்கிகள் ரிசர்வ் வங்கியின் எல்லைக்குள் கொண்டுவரப்படும் என்று குறிப்பிட்டிருந்தார். இருப்பினும், 2020 ஆம் ஆண்டு வங்கி ஒழுங்குமுறை (திருத்த) மசோதாவை நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரில் நிறைவேற்ற முடியவில்லை. இந்நிலையில், கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள சூழல் மாற்றங்கள் காரணமாக கூட்டுறவு வங்கிகளை ஆர்.பி.ஐ கீழ் கொண்டுவர மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

விண்வெளி துறையில் தனியார் பங்களிப்பை அனுமதிக்கும் முடிவுக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம் குஷிநகர் விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவு வங்கிகள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்கு கீழ் செல்லும் பட்சத்தில், விவசாயிகள் கடன் பெறுவதற்கான வரைமுறைகள் மாற்றப்படவும், கடன் நிலுவையை வசூலிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1newsnationuser4

Next Post

அரியலூர்: 50 பேரன்கள் கொண்ட பாட்டி.. உணவின்றி தவிக்கும் அவலம்

Wed Jun 24 , 2020
50 பேரப்பிள்ளைகள் இருந்தும் வறுமையில் வாடிய 105 வயது மூதாட்டிக்கு மளிகை பொருட்கள் தொகுப்பினை போலீசார் நிவாரணமாக வழங்கினர். அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே உள்ள தஞ்சாவூரான் சாவடி கிராமத்தை சேர்ந்தவர் காசியம்மாள்(வயது 105). இவரது கணவர் தங்கவேல் ஏற்கனவே இறந்துவிட்டார். இவர்களுக்கு 4 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். அவர்கள் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர். காசியம்மாளுக்கு மொத்தம் 50 பேரப்பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் யாரும் இவரை கவனிப்பதில்லை […]
202006241226484549 Tamil News 105 years old grandmother got grocery products relief SECVPF

You May Like