குழந்தைகளுக்கான அரிய மூலிகை கற்பூரவள்ளி…!!

‘கற்பூர வள்ளியின் கழறிலை… நற்பாலர் நோயெல்லாம் நாசமாயகலுமே…’ எனும் தேரையர் காப்பியப் பாடல், குழந்தைகளுக்கான மூலிகை இது என்பதை எடுத்துரைக்கிறது.

கற்பூர வள்ளி இலைச் சாற்றைச் சிறிதளவு தாய்ப்பாலில் கலந்து கொடுக்க, குழந்தைகளுக்கு உண்டாகும் மந்தம், இருமல் மற்றும் சளி தொந்தரவுகள் குறையும். வயிறு உப்பி, மலம் சரியாக வெளியேறாமல் இருக்கும் குழந்தைகளுக்கு, இதன் இலைச் சாற்றை வெதுவெதுப்பான நீரில் கலந்து கொடுக்கலாம்.

mother scolds her child

கற்பூர வள்ளி, ஏலம், கிராம்பு ஆகியவற்றை நீரிலிட்டுக் கொதிக்க வைத்து கஷாயமாக்கி இயற்கையான தேன் சேர்த்துப் பருக, செயற்கை இருமல் டானிக்குகளின் தேவையிருக்காது. காலை எழுந்ததும் அடுக்கடுக்கான தும்மலுடன், மூக்கில் நீர் வடிந்தால், இதன் சாற்றை நல்லெண்ணெய்யோடு சேர்த்துக் காய்ச்சி தலைக்குத் தேய்க்கலாம்.

இதன் இலைகளை நறுக்கி, நீரிலிட்டுக் கொதிக்க வைத்து, காலையிலும் மாலையிலும் கற்பூர வள்ளித் தேநீராகப் பருக, தொண்டைக்கு இதம் கிடைக்கும். தொண்டை கரகரக்கும் போதே, சிறிதளவு இலையை மென்று சாப்பிட, தொண்டையில் கட்டிய கபம் இளகும். உண்ட உணவு செரிக்காமல் வயிற்றுக்குள் ஏற்படும் களேபரங்களைத் தடுக்க, கற்பூர வள்ளிச் சாற்றை, நீரில் கலந்து பருகலாம்.

தண்ணீரில் கற்பூர வள்ளி இலைகளைச் சிதைத்துப் போட்டு, ஆவி பிடிக்கலாம். குழந்தைகளுக்குச் சளி, இருமல் இருக்கும்போது கற்பூர வள்ளி இலைச் சாற்றைக் குழந்தைகளின் மார்புப் பகுதியில் தடவலாம். கொசுக்கள் வராமல் தடுக்கும் மூலிகைகளுள் கற்பூர வள்ளியும் ஒன்று. கற்பூர வள்ளி இருந்தால், கற்பூரம்போல ஆரோக்கியமும் ‘டக்’கெனப் பற்றிக்கொள்ளும்!

Next Post

திணறும் டெல்லி..!! அரசு ஊழியர்களுக்கு இனி 'Work From Home'..! வெளியான பரபரப்பு உத்தரவு..!!

Sun Nov 6 , 2022
அரசு ஊழியர்களில் 50 சதவீதம் பேருக்கு வீட்டிலிருந்தே வேலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் மூச்சு முட்டுவதால், மக்கள் விழி பிதுங்கி நிற்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் காற்று மாசு அதிகரித்து கொண்டே செல்கிறது. கடந்த தீபாவளிக்கு பட்டாசுகளை விற்கவும், வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் நச்சுப் புகை , வாகனங்கள் வெளியிடும் புகை காரணமாக காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது. இதனால், டெல்லி மக்கள் மூச்சுவிடுவதற்கு கூட சிரமப்படும் […]

You May Like