கள்ள உறவை காட்டி கொடுத்த கேமரா..! காவலர்கள் பற்றி காவல்நிலையத்தில் புகார்..! 2020ல் இந்தியாவில் எல்லோரும் அதிகமா சொன்ன வார்த்தை இது தான்..! வாட்ஸ் அப்பில் அல்டிமேட் அப்டேட்..! 7 நாட்களில் தானாக மறையும் மெசேஜ்..! "தாமதமானதால் தான் உயிர் போச்சு" – ரோபோ ஷங்கர் சென்னையில் விற்கப்படும் போலி எம்ஐ சாதனங்கள்..! 33.3 லட்சம் மதிப்புள்ள போலி பொருட்கள் பறிமுதல்..! வீட்டில் இருந்தே கூகுள் மூலம் எளிதாக பணம் சம்பாதிக்கலாம்..! எப்படி தெரியுமா? முழு விவரம் உள்ளே..! அமேசான் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! 4 மணி நேரம் மட்டும் தான் வேலை..! மாத சம்பளம் ரூ.70 ஆயிரம்..! சென்னைக்கு அருகே நிவர் புயல்.. தற்போது எவ்வளவு வேகத்தில் நகர்ந்து வருகிறது..? 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சென்னை எண்ணூர் இன்ஸ்பெக்டர்… எப்பவும் போல தற்காலிக பணியிடம் நீக்கம் செய்யப்பட்டார்… முட்டையை ஃப்ரிட்ஜில் வைப்பவரா நீங்கள்..? அப்போ கட்டாயம் இத படிங்க..! சாப்பிடும் போது தண்ணீர் கொடுக்க தாமதமானதால் ஆத்திரம்..! மனைவியை போட்டு தள்ளிய பெரிசு..! முதலிரவின் போது பயத்தில் புதுமண தம்பதிகள் ஓட்டம்..! பழனி சட்டமன்ற தொகுதியை நிச்சயம் எங்களுக்கு கொடுக்க வேண்டும்..! அண்ணாமலை டிசம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது புது ரூல்ஸ்..! வங்கி சேவை முதல் சிலிண்டர் வரை..! உருவானது 'நிவர்' புயல்..! மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வானிலை மையம்..!

கொரோனா வைரஸை சித்தா ஆயுர்வேத யுனானி மருத்துவத்தின் மூலம் அழிக்க முடியுமா?… பரிசீலித்து முடிவெடுக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு…

சித்தா, ஆயுர்வேத, யுனானி மருத்துவத்தின் மூலம் கொரோனா வைரசை அழிக்க முடியும் என்ற கோரிக்கையை விரைவாக பரிசீலித்ததகுந்த முடிவை எடுக்கும்படி மாநில அரசு அமைத்துள்ள நிபுணர் குழுவுக்கு, சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

chennai high court

உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸினால் இதுவரை பல்லாயிரகணக்கானோர் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில், இந்த வைரசை அழிக்கவும், கொரோனா வைரஸ் தாக்கியவர்களின் உயிரை காப்பாற்றவும் சித்த, ஆயுர்வேத, யுனானி மருத்துவத்தில் மருந்து உள்ளதாக கூறி சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

siddha

அதில் கூறியிருப்பதாவது, இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருவதாகவும், இதனால் சமூக பரவலை தடுப்பதற்காக மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. ஆனால், இந்த வைரசை குணப்படுத்த இதுவரை முழுமையான ஆராய்ச்சியின் அடிப்படையில் மருந்தோ, தடுப்பு மருந்துகளோ கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்நிலையில், தற்போது, சித்த மருத்துவத்திலும், ஆயுர்வேத மருத்துவத்திலும், யுனானி மருத்துவத்திலும் இந்த கொரோனா வைரசை அழிக்க முடியும் என்றும், இந்த வைரஸால் பாதித்தவர்களின் உயிரை காப்பாற்ற முடியும் என்றும், இதை ஆதாரப்பூர்வமாக நிரூபித்தும் காட்டமுடியும் என்று கூறியிருந்தனர்.

மேலும், இதுவரை, இதுகுறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை மனுக்கள் அனுப்பியும், இதுவரை பரிசீலிக்கப்படவில்லை. எனவே இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

covid-19 corona

இதையடுத்து, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், சென்னை ஐகோர்ட்டும் மூடப்பட்டுள்ளது. இதனால், இந்த வழக்குகள் ‘ஜூம் ஆப்’ என்ற செயலி மூலம் விசாரிக்கப்பட்டன. இதில், நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர் இந்த வழக்குகளை விசாரித்தனர்.அரசு தரப்பு கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த்பாண்டியன், மனுதாரர் தரப்பு வக்கீல்கள் ஆகியோர் காணொலி காட்சி மூலம் தங்கள் வாதங்களை முன்வைத்தனர்.

Siddha and Unani

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், “கொரோனா வைரசை அழிக்க சித்தா உள்ளிட்ட மருத்துவத்தில் வழிமுறைகள் உள்ளன என்று மனுதாரர்களின் கோரிக்கையை மாநில அரசு அமைத்துள்ள நிபுணர் குழு விரைவாக பரிசீலித்து தகுந்த முடிவை எடுக்கவேண்டும்.

மேலும், கிருமிநாசினி, சோப், முக கவசம் ஆகியவற்றையும் தாராளமாக பொதுமக்களுக்கு கிடைக்க வழிவகை செய்யவேண்டும்” என்று உத்தரவிட்டனர். அதனை தொடர்ந்து விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்

1newsnationuser2

Next Post

ஒலிம்பிக் போட்டிக்கான தேதி அறிவிப்பு..!

Tue Mar 31 , 2020
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டு ஜூலை 23ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உலகம் முழுவதும் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி இருப்பதுடன், சர்வதேச விளையாட்டு போட்டிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், பல்வேறு சர்வதேச போட்டிகள் ரத்து செய்யப்பட்டும், தள்ளி வைக்கப்பட்டும் இருக்கின்றன. அதுபோல 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் உலகின் மிகப்பெரிய விளையாட்டு […]
2245 8184

You May Like