’வயாகரா’ மாத்திரை இதையெல்லாம் செய்யுமா..? எந்த கொடிய நோயும் நம்மை தாக்காதா..? ஆய்வாளர்கள் புதிய கண்டுபிடிப்பு..!!

இந்தக் காலத்தில் அல்சைமர் நோய் பாதிப்பு சற்றே அதிகரித்துள்ளது. பொதுவாக வயதானோருக்கு அதிகம் ஏற்படும் இந்த நோய், மிகவும் மோசமான நோய்களில் ஒன்றாகும். நாம் யார்.. நம்மை சுற்றி இருக்கும் குடும்பத்தினரே யார் என்று தெரியாமல் போவது.. நாம் இத்தனை காலம் வாழ்ந்த வாழ்க்கையையே கேள்விக்குள்ளாக்குவது போல அமைந்துவிடுகிறது. அல்சைமர் நோயை எதிர்த்துப் போராடக்கூடிய மருந்துகளைக் கண்டறிய 10 ஆண்டுகளுக்கு மேலாக ஆய்வாளர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்போது தொடர்பே இல்லாத ஒரு மருந்து அல்சைமரை எதிர்த்துப் போராட வாய்ப்பு உள்ளதை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதுதான் பாலியல் பிரச்சனைகளுக்கு பயன்படுத்தப்படும் வயாகரா மாத்திரை. இந்த ஆய்வு முடிவுகள் இறுதியானது இல்லை என்றாலும், வயாகரா குறித்த இந்த ஆய்வு முடிவு முக்கியமானதாகவே பார்க்கப்படுகிறது. வயாகராவை எடுத்துக் கொள்ளாதவர்களுடன் ஒப்பிடுகையில், வயாகராவை எடுத்துக் கொண்ட ஆண்களுக்கு அல்சைமர் பாதிப்பு ஏற்படுவது 18% வரை குறைந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒருவர் எந்தளவுக்கு வயாகரா எடுத்துக் கொள்கிறாரோ அந்தளவுக்கு அதன் விளைவும் வலிமையானதாக இருந்துள்ளது. 21 முதல் 50 முறை இந்த வயாகரா மாத்திரைகளை எடுத்துக் கொண்டவர்களுக்கு அல்சைமர் ஆபத்து 44% குறைவாக இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்ததுள்ளனர். இந்த கண்டுபிடிப்புகள் ஆச்சரியமாக இருந்தாலும், வயாகரா மாத்திரைகளால் அல்சைமர் நோயில் இருந்து ஆண்களைப் பாதுகாக்க முடியும் என்பதை ஆய்வாளர்களால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை.

இது குறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், “அல்சைமர் குறைந்ததற்கு வயாகரா மாத்திரைகள் தான் காரணம் என்பதை உறுதியாகச் சொல்ல முடியவில்லை. ஆனால், இந்த முடிவுகளை வைத்து அடுத்தக்கட்ட சோதனையை நடத்த உள்ளோம். அடுத்து ஆண்கள் மற்றும் பெண்களுக்கு அல்சைமர் ஏற்படுவதை இந்த மாத்திரைகள் எந்தளவுக்குக் குறைக்கிறது என்பதை ஆய்வு செய்கிறோம்” என்றார். இந்த ஆய்வில் பாலியல் பிரச்சனைகளை சந்தித்த 2.60 லட்சம் ஆண்களிடம் சோதனை நடத்தப்பட்டது. அவர்களில் யாருக்கும் நினைவாற்றல் இழப்புக்கான எந்த ஆதாரமும் இல்லை என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.

அவர்களில் பெரும்பாலானோர் வயாகரா உள்ளிட்ட மாத்திரைகளை எடுத்துக் கொண்டனர். இந்த மருந்து மூளையில் இருக்கும் புரதங்களை அகற்றுவதால் அது அல்சைமர் பாதிப்பை மெதுவாக்க வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். முதலில், வயாகரா மாத்திரைகள் ஆஞ்சினா மற்றும் உயர் ரத்த அழுத்தச் சிகிச்சைக்காக தான் உருவாக்கப்பட்டது. ஆனால், அதனை எடுத்துக் கொண்ட நபர்கள் பலருக்கும் இரவு நேரங்களில் எதிர்பாராத மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகே இது பாலியல் பிரச்சனைகளைக் குணப்படுத்தும் நோயாக மாறியது. இன்று வயாகரா மட்டும் கோடிகளில் புரளும் ஒரு பிஸ்னஸாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser6

Next Post

ஷாக்!… 5009 முறை உருமாறிய ஒமைக்ரான்!… ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

Fri Feb 9 , 2024
கொரோனா 3ம் அலையின் போது பரவிய ஒமைக்ரான் பி1.1 வைரஸ் இதுவரை 5009 முறை உருமாறியுள்ளதாக ஜர்னல் ஆப் மெடிக்கல் வைராலஜி நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் தொற்று கடந்த ஓராண்டாக அதிகளவில் உருமாற்றம் அடைந்துள்ளது. தனது தன்மையை அதிகளவு மாற்றிக் கொண்டு இருந்தாலும் அதன் வீரியம் குறைவாக இருப்பதால் அதிக பாதிப்பு இல்லை என பொது சுகாதாரத்துறையின் பகுப்பாய்வு அறிக்கை […]

You May Like