புற்றுநோய் பெரும்பாலும் நமது உடலில் சத்தமில்லாமல் வளர்ந்து பெருகி இறுதியில் மரணத்திற்கு வழி வகுக்கிறது. என்ன தான் பல மருந்துகள், சிகிச்சைகள் புற்றுநோயை தணிக்க கண்டறியப்பட்ட போதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

புற்றுநோய் உடலில் உள்ள அதிகப்படியான உயிரணுக்களால் ஏற்ப்படும் கட்டியின் காரணமாக வருகிறது. தற்போது பெண்களுக்கும் மார்பக புற்றுநோய் அதிகமாக வருகிறது. இதனை தொடர்ந்து இடுப்பிலும் புற்றுநோய் கட்டிகள் உருவாதாக ஆராய்சிகள் தெரிவிக்கின்றன.
இதற்கு நிறைய காரணங்கள் உள்ளது எனினும் இடுப்பில் கட்டப்படும் பாவாடை நாடா முக்கியமாக கருதப்படுகிறது. இதனை இறுக்கமாக கட்டுவதால் ஏற்ப்படும் விளைவு இந்த புற்று நோய். இதனை பெண்கள் கருத்தில் கொண்டு முன்எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
தொடர்ந்து பாவடையை இறுக்கமாக கட்டும் பெண்கள் வீட்டில் உள்ள சிறு நேரமாவது அதனை இலகுவாக கட்டிக்கொள்ளலாம். அல்லது பெல்ட் போன்று பாவாடை நாடாவை மாற்றி அமைக்கலாம். கயிறு கட்டிய இடத்தில் நிறமாற்றம், அரிப்பு எரிச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகலாம். வரும் முன் காப்பதே சிறந்தது.