2 பந்துகளில் 27 ரன்கள் அடித்த ஆர்ச்சர்…. 9 சிக்ஸர்கள் அடித்த சஞ்சு சாம்சன்…. மாஸ் காட்டியா ராஜஸ்தான்… அம்பத்தி ராயுடு விலகல்…தோனி கூறிய காரணம்! ஐபிஎல் கிரிக்கெட் போட்டி…சென்னை அணிக்கு 217 ரன்கள் இலக்கு! 4வது லீக் ஆட்டம்….காயம் காரணமாக அம்பத்தி ராயுடு விலகல்! 4வது லீக் ஆட்டம்…சென்னை அணி பந்துவீச்சு தேர்வு! ரெய்னா, தினேஷ் கார்த்திக் சாதனைகளை முறியடிப்பாரா தல தோனி? சர்ச்சையில் சிக்கிய பஞ்சாப் கேப்டன் கே.எல்.ராகுல்..! ஏற்கனவே வாய்க்கா தகராறு.. இப்போ இது வேறயா?.. கொஞ்சமா நெஞ்சாமா… குடித்துவிட்டு இன்ஸ்பெக்டர் செய்யும் அராஜகம்! குட்நியூஸ்..!! அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்.. Record Break..!! சிஎஸ்கே vs மும்பை இடையிலான முதல் ஐபிஎல் போட்டியை எத்தனை கோடி பேர் பார்த்தனர் தெரியுமா..? நான் அப்படி என்ன சொல்லிட்டேன்னு அவரு என் மேல கோவமா இருக்காரு?.. அதிமுக எம்பி காட்டம்..! குடும்ப உறுப்பினர்களால் அதிகளவில் பெண்கள் கற்பழிக்கப்படுகின்றனர்…பாக்., நாடாளுமன்ற உறுப்பினர் பரபரப்பு பேச்சு! கொரோனாவை விட கடுமையான புதிய பாக்டீரியா தொற்று.. சீனாவில் பரவுவதால் இந்தியாவிற்கு என்ன ஆபத்து..? திருமணம் ஆனதை மறைத்து வேறொரு திருமணம் செய்பவர்களுக்கு என்ன தண்டனை தெரியுமா?… முதல்வர் இல்லாத நேரத்தில் கெத்து காட்டிய ஓபிஎஸ்..! கட்சி அலுவலகத்தில் அவசர ஆலோசனை நடத்தியது இதற்குதான்..!

“கெஞ்சி கேட்டும் வெண்டிலேட்டரை நீக்கிவிட்டனர்..” இறப்பதற்கு முன்பு கொரோனா நோயாளி வெளியிட்ட வீடியோ..

ஹைதராபாத் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபர், தான் இறப்பதற்கு முன்பு வெளியிட்ட வீடியோவில் வெளியிட்டுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இறப்பதற்கு முன்பு

கடந்த வாரம் புதன்கிழமை தெலங்கானாவை சேர்ந்த 34 வயது இளைஞருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து 10 தனியார் மருத்துவமனைகள் அவரை அனுமதிக்க மறுத்தத்தாக கூறப்படுகிறது. அதன்பிறகு, அந்த இளைஞர் ஹைதரபாத் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 4 நாட்களாக அவருக்கு வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று திடீரென மருத்துவர்கள் வெண்டிலேட்டரை அகற்றியதாக கூறப்படுகிறது.

இதனால் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதை அடுத்து, தனக்கு வெண்டிலேட்டரை வைக்கும் அவர் மருத்துவர்களிடம் கெஞ்சியுள்ளார். 3 மணி நேரத்திற்கு மேலாக வெண்டிலேட்டர் வைக்கப்படாததால், அவர் உயிரிழந்தார்.

இறப்பதற்கு முன்பாக அந்த இளைஞர், செல்போனில் பதிவு செய்த செல்பி வீடியோவை தனது தந்தைக்கு அனுப்பியுள்ளார். அந்த வீடியோவில் “ என்னால் மூச்சுவிட முடியவில்லை.. நான் கெஞ்சி கேட்டும் கடந்த 3 மணி நேரமாக எனக்கு ஆக்ஸிஜன் சப்ளை வழங்கப்படவில்லை.. இனிமேல் என்னால் மூச்சுவிட முடியாது அப்பா.. என் இதயம் நின்றுவிட்டதை போல உணர்கிறேன்.. போய் வருகிறேன் அப்பா.. அனைவரிடம் இருந்தும் விடை பெறுகிறேன் அப்பா” என்று பேசியுள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த இளைஞர் உயிரிழக்கும் ஒரு மணி நேரத்திற்கு முன்பு அந்த வீடியோ எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பேசிய அந்த இளைஞரின் தந்தை, ” எனது மகன் உதவி கேட்டும், யாரும் உதவவில்லை.. இறுதி சடங்கை முடித்து வீட்டிற்கு வந்த போது அவனின் வீடியோவை பார்த்தேன். என் மகனுக்கு ஏற்பட்ட நிலை யாருக்கும் ஏற்படக்கூடாது. அவர் கொரோனா பாதிப்பில் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்” என்று தெரிவித்தார்.

1newsnationuser1

Next Post

அடுத்த லாக் அப் டெத்க்கு தயாராகுங்கள் - சென்னை ஆயுதப்படை காவலர்

Mon Jun 29 , 2020
சாத்தான்குளம் சம்பத்தை குறித்து சமூக வலைத்தளங்களில் பொறுப்பற்ற முறையில் பதிவிட்டிருந்த சென்னை ஆயுதப்படை காவலர் சதீஸ்குமார் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகள் ஜெயாராஜ் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரையும் விசாரணை என்ற பெயரில் சிறையில் அடைத்து கொடூரமாக தாக்கியதில் இருவரும் பலியான விவாகரம் பூதாகரமானது. இதற்கு உயர் அதிகாரிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் பலரும் ஆதராவாக குரல் கொடுத்து #justiceforJeyarajandFenix என்ற ஹேஸ்டாக்கை […]
EblhJjdXQAAgJgd 1

You May Like