14+1 கொடுக்க முடியாது..!! பாஜகவிடம் இருந்து விலகி அதிமுகவில் ஐக்கியமாகும் தேமுதிக..? விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

மக்களவைத் தேர்தலில் தேமுதிகவை தங்கள் கூட்டணியில் இணைத்துக் கொள்ள பாஜக தரப்பும், அதிமுக தரப்பும் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. இரண்டு தரப்பிலும் கூட்டணிக்கு அழைப்பதால் தேமுதிக தனது டிமாண்ட்டை அதிகரித்துக் கொண்டே சென்றது. கட்சியின் பொதுக்குழு, செயற்குழு கூட்டத்திற்கு பின் பேசிய பிரேமலதா, “தேமுதிகவுக்கு 14 மக்களவை இடங்கள், ஒரு மாநிலங்களவை இடம் யார் கொடுக்கிறார்களோ அவர்களுடன் கூட்டணி வைக்கலாம் என்று அனைத்து மாவட்டச் செயலாளர்களும் தங்களது இறுதி முடிவாக அறிவித்துள்ளனர்” என்று தெரிவித்தார்.

அதற்கு எந்த வகையிலும் சாத்தியம் இல்லை என்று தெரிந்தும் பிரேமலதா விஜயகாந்த் இவ்வாறு கூறியதற்கு காரணம், யார் அதிக இடங்களை கொடுக்கிறார்களோ அவர்களுடன் தான் கூட்டணி என்பதை தெரிவிக்கத்தான். இந்நிலையில், அவரது ஆஃபரை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. பாஜக தரப்பில் அதிகபட்சம் 3 தொகுதிகள் மட்டுமே தர முடியும் என்றும், மாநிலங்களவை உறுப்பினர் குறித்து பின்னர் யோசித்துக் கொள்ளலாம் என்றும் பதில் கூறப்பட்டதாக தெரிகிறது.

ஆனால், அதிமுக தரப்பில் மூன்று மக்களவைத் தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் தர சம்மதித்துள்ள நிலையில், இதற்கு பிரேமலதா ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த முறை மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றோ அல்லது மாநிலங்களவை மூலமோ நாடாளுமன்றத்துக்கு சென்றே தீர வேண்டும் என்று பிரேமலதா முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கின்றன.

அதிமுகவிடம் இருந்து மாநிலங்களவை உறுப்பினர் பதவி பெற்று எதிர்காலத்தில் அப்படியே பாஜகவை சமாதானப்படுத்தி மத்திய அமைச்சர் பதவியும் பெற்றுக் கொள்ளலாம் என்றும் பிரேமலதா கணக்குப் போடுவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், கிட்டத்தட்ட அதிமுக – தேமுதிக கூட்டணி முடிவடைந்து விட்டதாகவும், விரைவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் பிரேமலதா ஆகியோர் நேரில் சந்தித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

1newsnationuser6

Next Post

பைக் மோதியதில் ஏற்பட்ட தகராறு.! கொடூர தாக்குதலில் ஒருவர் பலி.! பலத்த காயத்துடன் அனுமதி.!

Sat Feb 10 , 2024
ராஜஸ்தானில் உள்ள ஒரு கிராமத்தில் பைக் மோதிய தகராறில், இரண்டு இளைஞர்கள் கொடூரமாக தாக்கப்பட்டனர். அதில் ஒருவர் பரிதாபமாக உயிர் இழந்தார் மற்றொருவர் பலத்த காயங்களுடன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜஸ்தான் மாநிலத்தின், ஹனுமன்கர் மாவட்டத்தில் உள்ள சங்கரியா பகுதியில் இருக்கும் ஜண்ட்வாலா சிகான் கிராமத்தில் பைக் மோதிய விவகாரத்தில், சந்தீப் சிங் மற்றும் […]

You May Like