இனிமே இந்த உணவுகளை சாப்பிடாதீங்க.. இதய நோய், பக்கவாதம் என பல நோய்கள் ஏற்படுமாம்.. வாகன ஓட்டிகளே கவனம்.. இனிமே இதை செய்யவில்லை என்றாலும் அபராதம்.. காவல்துறை எச்சரிக்கை.. உங்க வீட்டு வாசலை தேடி வரும் பெட்ரோல், டீசல்.. அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட சென்னை நிறுவனம்.. உலகின் தனிமையான வீடு.. கடந்த 100 ஆண்டுகளாக யாரும் இங்கு வசிக்கவில்லை.. ஏன் தெரியுமா..? மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதம்.. புதிய வகை சக்கர நாற்காலி அறிமுகம்.. அப்படி என்ன ஸ்பெஷல்..? வீட்டில் இருந்து கொண்டே, இந்தியர்கள் அமெரிக்க வங்கி கணக்கை தொடங்கலாம்.. எளிய வழி இதுதான்.. இவரெல்லாம் ஒரு தந்தையா..? பெற்ற மகள்களை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்.. மக்களே ஒரு குட்நியூஸ்.. விரைவில் கிடைக்கப் போகிறது சுத்தமான எரிபொருள்.. அரசின் புதிய யோசனை.. வேறொரு பெண்ணுடன் படுக்கையில் இருந்தாரா எடியூரப்பா..? படமெடுத்து மிரட்டும் சொந்தக் கட்சியினர்.. மக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் டார்ச் சின்னம் – குதூகலத்தில் கமல்ஹாசன் முன்பதிவு செய்த 2 மணி நேரத்திலேயே சிலிண்டர் கிடைக்கும்..! எப்படி தெரியுமா..? எச்சரிக்கைப் பதிவு.. கொரோனா வைரஸ் எந்தெந்த உறுப்புகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது தெரியுமா..? இதை மட்டும் செய்யுங்கள்.. மத்திய அரசின் ரூ. 5 கோடி பரிசை பெறலாம்.. அசத்தல் அறிவிப்பு.. சீப்பாக கிடைக்கும் இந்த பழத்தில் இவ்வளவு மருத்துவ குணமா..? இனி தினமும் சாப்பிடுங்க..! மாஸ்டர் படம் விஜய்க்கு லாபமா ! நஷ்டமா ! வசூல் நிலவரம் என்ன ?

தமிழகத்தில் அக்டோபரில் கொரானா உச்சம்.. 10ம் வகுப்பு தேர்வை நடத்தியே ஆகவேண்டும் – தமிழக அரசு

கொரானா தொற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்த இதுவே சரியான தருணம் என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

202005260321205575 Corona not come How to Defend Government of Tamil Nadu plans SECVPF

கொரானா தொற்று பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக, ஒத்திவைக்கப்பட்ட 10ம் வகுப்பு தேர்வு ஜூன் 15ம் தேதி முதல் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. இத்தேர்வுகளை இரண்டு மாதங்களுக்கு தள்ளிவைக்க கோரி, தமிழ்நாடு உயர் நிலை, மேல் நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிக்கு வினித் கோத்தாரி, சுரேஷ் குமார் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் தமிழக அரசுக்கு சரமாரி கேள்வி எழுப்பினர்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்த தமிழக அரசு அவசரம் காட்டுவது ஏன் என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும் லட்சக்கணக்கான மாணவ, மாணவியரின் நலனில் எப்படி ரிஸ்க் எடுக்க முடியும் என்றும், மாணவர்களின் தலைக்கு மேல் கத்தி தொங்குவதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

download 17

தொடர்ந்து, 10ம் வகுப்பு பொதுத் தேர்வை ஜூன் 15ல் நடத்த ஏன் தடை விதிக்கக் கூடாது என்று கேள்வி எழுப்பிய நிலையில் அரசு தலைமை வழக்கறிஞரை உடனே ஆஜராக கூறி விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர். அத்துடன் 2.30 மணிக்கு நீதிமன்றத்தில் தலைமை வழக்கறிஞர் விளக்கம் அளிக்காவிட்டால் தேர்வை ஒத்திவைக்க நேரிடும் என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர்.

தொடர்ந்து, பிற்பகலில் நடந்த வழக்கு விசாரணையில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பங்கேற்று விரிவான அறிக்கையை தாக்கல் செய்தார். அதில், தமிழகத்தில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 2 லட்சம் பேர் வரை கொரானா தொற்றால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். எனவே, தேர்வுகளை நடத்தி முடிக்க இதுவே சரியான தருணம், இல்லையேல் மாணவர்களுக்கு அது பெரும் அச்சுறுத்தலாக அமையும் என என தெரிவிக்கப்பட்டது. மேலும், தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் எனவும், தேர்வின்போது மத்திய அரசின் வழிக்காட்டுதல்கள் முழுமையாக பின்பற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து, பொதுத்தேர்வுகளை ஏன் ஜூலை மாதத்தில் நடத்தக் கூடாது. தமிழகத்தில் தற்போது தேர்வுகள் நடத்தப்பட்டால் 9 லட்சம் மாணவர்கள், 4 லட்சம் ஆசிரியர்களுக்கு கொரானா தொற்று ஏற்படாது என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய முடியுமா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், உயிரிழப்பு ஏற்பட்டால் அரசால் இழப்பீடு வழங்க முடியுமே தவிர, உயிருக்கு உத்தரவாதம் வழங்க முடியுமா எனவும் கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து, விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அரசு தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து, வழக்கின் விசாரணையை ஜூன் 11ம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1newsnationuser4

Next Post

உடல் நல பாதிப்பால் தனிமைப்படுத்திக் கொண்ட முதலமைச்சர்.. நாளை கொரோனா பரிசோதனை..

Mon Jun 8 , 2020
உடல் நல பாதிப்பால் தன்னை தானே தனிமைப் படுத்திக் கொண்டுள்ள டெல்லி முதல்வருக்கு நாளை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நேற்று மதியம் முதல் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. 51 வயதான அவருக்கு லேசான, காய்ச்சல், இருமல் இருப்பதால், நாளை அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அவருக்கு சர்க்கரை நோய் […]
உடல் நல பாதிப்பால் த

You May Like