விருதுநகரில் பெண் ஒருவர் தன் கணவனின் கள்ள தொடர்பை தட்டி கேட்டதால் கணவர் மிரட்டியதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
விருதுநகர் பர்மா காலனியை சேர்ந்த சுகன்யா (33) என்பவருக்கும் சென்னை ஆவடி பட்டாலியன் காவல்த்துறையில் போலீஸ் ஏட்டாக பணிபுரியும் சரவணகுமார் என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உண்டு.
இந்நிலையில் சரவனகுமாருக்கும் உடன் வேலை செய்யும் பெண்ணிற்கும் இடையே தகாத உறவு இருந்துள்ளது. இதனால் சுகன்யா கணவரை மூன்று மாதங்களுக்கு முன்பு கண்டித்துள்ளார். இருப்பினும் அந்த பெண்ணுடனான உறவை சரவணகுமார் விடவில்லை. இதனால் மனைவி சுகன்யாவை துன்புறுத்தியதுடன் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து கேட்டு மிரட்டியுள்ளார். இதற்கு மறுத்த சுகன்யாவை விருதுநகரில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு அனுப்பியுள்ளார்.
தொடர்ந்து விருதுநகரில் உள்ள அவர்களது வீட்டிற்கும் வந்து விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து கேட்டு மிரட்டியுள்ளார். இதனால் சுகண்யா அருகில் உள்ள மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்குபதிவு செய்த காவல்த்துறை ஏட்டு சரவணகுமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.