பைக்கில் ஏற மறுத்த பெண்; எரிந்த நிலையில் சடலமாக மீட்பு… “பேண்ட் ஜிப்பை கழற்றுவது பாலியல் குற்றம் இல்லை..” மார்பை தொடுவது குறித்து சர்ச்சை தீர்ப்பளித்த அதே நீதிபதி தான்.. ஏழை மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட்போன்; 'மி இந்தியா' உடன் கைகோர்கிறார் சோனுசூட்… ரூ. 50,000 தள்ளுபடி விலையில் கார் வாங்கலாம்.. அசத்தல் ஆஃபர்.. எந்தெந்த நிறுவனங்களில்..? மக்களே உஷார்..! புதிய கொரோனா வைரஸ் 70 நாடுகளுக்கு பரவியுள்ளது..! WHO விடுக்கும் எச்சரிக்கை..! 'பூவே உனக்காக' படத்தில் நடித்த ஹீரோயினா இது..! அட.. ஆளே அடையாளம் தெரியாத மாதிரி மாறிட்டாங்களே..! தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை.. வானிலை மையம் தகவல்.. ஜெயலலிதா பிறந்தநாள் இனி அரசு விழா.. முதல்வர் அறிவிப்பு.. 'மாமியார் வீட்டுல இராணுவ வீரர்னு சொல்லிட்டேன்.. அதான்..' சீருடை அணிய தெரியாமல் சிக்கிய போலி இராணுவ வீரர்..! ஜெயலலிதா சிலை திறப்புக்கு உதவிய நடிகர் அஜித்.. எப்படி தெரியுமா..? பளிச்சென்று பறந்து கொண்டிருந்த UFO..! "இப்படி ஒன்றை பார்க்கவே முடியாது" ஷாக் ஆன விமானி..! யூடியூப், பேஸ்புக் வீடியோக்களுக்கு வருகிறது கட்டுப்பாடு..! பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு..! பயணி போல் நடித்து கார் டிரைவர் கொலை..! 15 ஆண்டுகளாக நீதிமன்றத்தை ஏமாற்றிய கொலையாளி..! "Boyfriend இல்லாமல் கல்லூரிக்கு வரக்கூடாது.." பிரபல கல்லூரியின் நோட்டீஸால் சர்ச்சை.. தொடர்ந்து 18 கொலைகள்..! சிக்கிய சீரியல் கில்லர் கொடுத்த பகீர் வாக்குமூலம்..!

சுஷாந்த் சிங் மரணம்: சல்மான்கான் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலைக்கு பின்னணியில் முன்னணி நடிகர் சல்மான் கான் உள்ளிட்ட திரைத்துறையை சேர்ந்த 8 பேர் இருப்பதாக வழக்கறிஞர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

n19189009277a6cae6cfa852067a53797db05ed735e990662c14723ac3ad3b0a6dd34b81b5

கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடித்து, இந்திய அளவில் மட்டுமல்லாது, உலகம் முழுக்க கவனம் ஈர்த்தவர் பாலிவுட்டின் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். ஆனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை மும்பையில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்ட நிலையில், சுஷாந்த் சிங் ராஜ்புத், சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என குற்றம்சாட்டப்பட்ட நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தூக்குக் கயிறு இறுகியதால் மூச்சு திணறி சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.

n191890092f4e8ff896f51cf6f22c13ba2ffc78706ff2cd0c20d0829f29b31c634e918a23e

தற்கொலை முடிவுகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய திரைப்படத்தில் நடித்த சுசாந்த் சிங், எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்ற கேள்வி அவரது ரசிகர்களை துளைத்து எடுத்தது. சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்திற்கு நீதி வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் ஹேஷ்டேக் மூலம் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

n191890092d41976d5144e892a666ff72176f83d6048d69828ed92ee8cd20441543d162b1f

இந்த நிலையில் திடீர் திருப்பமாக வழக்கறிஞர் சுதீர் குமார் ஓஜா என்பவர் பீகார் மாநிலம் முசாபர்பூர் நீதிமன்றத்தில் இன்று ஒரு வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில் பிரபல நடிகர் சல்மான்கான், பிரபலங்களான, கரன் ஜோகர், சஞ்சய் லீலா பன்சாலி, ஏக்தா கபூர் உள்ளிட்ட 8 பேர் மீது சுஷாந்த் சிங் ராஜ்புத்தை தற்கொலைக்கு தூண்டியதாக குறிப்பிட்டுள்ளார். ஐபிசி சட்டப்பிரிவு 306, 109, 504, 506 ஆகியவற்றின் கீழ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கறிஞர் சுதீர் குமார் ஓஜா தெரிவித்துள்ளார்.

சல்மான்கான் உள்ளிட்டோரின் அழுத்தம் காரணமாக சுஷாந்த் சிங் சுமார் 7 படங்களில் இருந்து நீக்கப்பட்டதாகவும், தொடர்ச்சியாக பட வாய்ப்பு கிடைக்காமல் மன உளைச்சலில் இருந்த அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் வழக்கறிஞர் சுதிர்குமார் குற்றம்சாட்டி உள்ளார். இந்த விவகாரத்தில் சல்மான் கான் பெயர் வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1newsnationuser4

Next Post

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கைமீறி செல்ல அரசு விட்டுவிடவில்லை- பிரதமர் மோடி பேச்சு

Wed Jun 17 , 2020
டெல்லி: கொரோனா வைரஸினை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை துரிதமாக எடுத்து வருவதால் இந்தியாவில் தொற்றின் பரவலை கைமீறி சென்றுவிட அரசு விட்டுவிடவில்லை என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தடுப்பு மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்துவது தொடர்பாக கடந்த 2 நாட்களாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினர். நேற்று 21 மாநில முதல்வர்கள், துணைநிலை ஆளுநர்களுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் […]
புதிய கல்விக் கொள்கையில் முக்கிய முடிவு...! மத்திய அமைச்சர்களுடன் மோடி ஆலோசனை...

You May Like