அமலுக்கு வந்தது மத்திய அரசின் புதிய கோவிட் – 19 வழிகாட்டுதல்கள்.. எதற்கெல்லாம் அனுமதி.. எதற்கெல்லாம் தடை.. சசிகலா முன்கூட்டியே விடுதலையாக கூடாது.. தடை போடும் அதிமுக..? பின்னணி என்ன..? வயலில் வேலைபார்த்த 110 விவசாயிகள் கழுத்தை அறுத்து கொலை..! ஒரே இடத்தில் தகனம்..! ரூ.15,000 கோடி மதிப்பிலான முகேஷ் அம்பானியின் பங்களா..! 3 ஹெலிகாப்டர், மினி தியேட்டர், 600 ஊழியர்கள்.. இன்னும் பல..! வலுப்பெறும் புயல்.. அதிகனமழை கொட்ட போகும் 5 மாவட்டங்கள்.. வானிலை மையம் எச்சரிக்கை.. காதலனை பிரிந்திருக்க முடியாமல் ரூ.32 கோடி செலவழித்த ஆலியா..! அப்படி என்ன செலவு பண்ணாரு..? RTGS பண பரிமாற்றத்தில் வந்தது நேரக் கட்டுப்பாடு..! முழு விவரங்கள் உள்ளே.. காதலிக்கு வேறு ஒருத்தன் அனுப்பிய குறுஞ்செய்தி..! அடுத்து நடந்த பயங்கரம்..! மின்கம்பி அறுந்து விழுந்து கைகளை பறிகொடுத்த பெண்..! வாயை திறக்காத மின்வாரியம்..! எப்போதும் போல ஒரே வார்த்தை தான்.. அரசியல் களத்தை மீண்டும் பரபரப்பாக்கிய மு.க அழகிரி.. மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்.. கள்ளத்தொடர்பை தட்டி கேட்ட மனைவி..! ஏட்டு மீது பாய்ந்த வழக்கு..! நாளை கரையை கடக்க உள்ள புரேவி புயல்.. 11 துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.. வாட்ஸ்அப் மூலம் சிலிண்டர் புக் செய்வது எப்படி..? இந்த நிறுவனத்தில் டிரைவர் முதல் பியூன் வரை எல்லோரும் கோடீஸ்வரர் தான்..! ஏன் தெரியுமா..?

ஊரடங்கு உத்தரவை மீறினால் வழக்கு பதிவு செய்ய வேண்டும்… மத்திய அரசு உத்தரவு…

ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.

maththiya arsu

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுபடுத்தும் வகையில், ஊரடங்கு உத்தரவை அமல்படுத்திய நிலையில், பொதுமக்கள் அனைவரும் வெளியில் சென்று கொண்டிருப்பதால் வைரஸ் தொற்று அதிகமாகவும், உயிரிழப்பு ஏற்படகூடும் என்பதாலும், அவர்கள் வெளியில் வராமல் தடுக்கும் வகையில், மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில் கூறியதாவது, கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதுபற்றிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்ட போதே, ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் பேரழிவு மேலாண்மை சட்டத்தின் 51 மற்றும் 60-வது பிரிவுகளின் கீழும், இந்திய தண்டனை சட்டம் 188-வது பிரிவின் படியும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

எனவே ஊரடங்கு நடவடிக்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் மேற்கண்ட சட்ட பிரிவுகளை மீறுபவர்கள் மீது சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரிகள் அந்த பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்வும், இதுபற்றி மக்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தது.

மேலும், இந்த சட்ட பிரிவுகளை மீறும் வகையில் செயல்படுவோருக்கு அதிகபட்சமாக 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க முடியும். மேலும் தவறான தகவல்களை பரப்புவோருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் விதிக்க முடியும். அத்துடன் பேரழிவு போன்ற இத்தகைய சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி பணம் மற்றும் பொருட்களை கையாடல் செய்வோருக்கும் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் விதிக்க முடியும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.

1newsnationuser2

Next Post

உலக அளவில் 10 லட்சத்தை தாண்டிய கொரானாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை.

Fri Apr 3 , 2020
உலகம் முழுவதும் கொரானாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10.15 லட்சத்தை கடந்தது. சீனாவில் முதன் முதலாக கொரானா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்டது. தற்போது, கொரானா 200-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி உலக மக்களை மிரட்டி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி உலக அளவில் நோய்த்தொற்றுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 53 ஆயிரத்த்தை கடந்துள்ளது. […]
images 5

You May Like