நாய்க்கு சாதி சான்றிதழ்..!! மிரள வைக்கும் ஆதார் அட்டை..!! மிரண்டு போன அதிகாரிகள்..!!

நாயின் புகைப்படத்துடன் கூடிய ஆதார் அட்டை, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பீகார் மாநிலத்தில் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள குராரு மண்டல அலுவலகத்துக்கு, டாமி என்ற நாய்க்கு, சாதி சான்றிதழ் கோரி ஆன்லைனில் விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது. விண்ணப்பத்துடன் நாய் பெயரிலான ஆதார் அட்டையின் நகலும் இணைக்கப்பட்டுள்ளது. இதனைப் பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த ஆதார் அட்டையில், பெயர் டாமி, பிறந்தநாள் 14.04.2022, முகவரி உள்ளிட்ட விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஆதார் அட்டையில், ‘ஆதார் – சாதாரண மனிதனின் அதிகாரம்’ என்று இருக்கும். இந்த டாமிக்கான ஆதார் அட்டையில், ‘ஆதார் – சாதாரண நாயின் அதிகாரம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பதை நிராகரித்த குராரு மண்டல அதிகாரி சஞ்சீவ் குமார் திரிவேதி, இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில், இந்த குசும்பை செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Chella

Next Post

ஆசிய கோப்பை..!! பொருளாதார நெருக்கடி.!! திடீர் மாற்றம்..!! வெளியான முக்கிய அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி..!!

Sun Feb 5 , 2023
பாகிஸ்தானில் நடைபெறுவதாக இருந்த ஆசிய கோப்பையை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் முடிவெடுத்திருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் உறுப்பு நாடுகள் அனைத்தும் பங்கேற்ற அவசர கூட்டம் நேற்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் கவுன்சில் தலைவர் சேதி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு ஆசிய கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ”வரவிருக்கும் 2023ஆம் ஆண்டின் ஆசியக்கோப்பை குறித்த ஆக்கப்பூர்வமான […]
ஆசிய கோப்பை..!! பொருளாதார நெருக்கடி.!! திடீர் மாற்றம்..!! வெளியான முக்கிய அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி..!!

You May Like