fbpx

66 பணியிடங்களை நிரப்ப நடைபெற்ற குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த லாவண்யா மாநில அளவில் முதலிடம் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

தமிழ்நாடு அரசில் துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், வணிகவரி உதவி ஆணையர் உள்ளிட்ட குரூப் 1 பணியிடங்களில் காலியாக உள்ள 66 இடங்களை நிரப்புவதற்கான முதல்நிலைத் …

காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. கர்நாடகா மற்றும் கேரளா மாநில நீர் பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததை அடுத்து விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளுக்கு வரும் நீரின் அளவு, கூடுவதும் குறைவதுமாக …

அதிமுகவில் இரண்டாம் கட்டமாக நீக்கப்பட்ட நிர்வாகிகள் பட்டியலை ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ளார்.

அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்சக்கட்டமாக நீடித்து கொண்டிருக்கும் நிலையில், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் இருவரும் நிர்வாகிகளை நீக்கி அறிவிப்பு வெளியிட்டு வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி உட்பட 22 தலைமைக் கழக நிர்வாகிகளை நீக்குவதாக நேற்றைய தினம் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இந்நிலையில், இன்று …

ஆளும் மத்திய அரசு உணவுப் பொருளான அரிசி மற்றும் கோதுமைக்கு ஐந்து சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதித்துள்ளது. உணவுப் பொருள்களுக்கான இந்த வரியை கண்டித்து பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் தமிழக முழுவதும் உள்ள அரிசி ஆலை உரிமையாளர்கள் நாளை வேலை நிறுத்த போராட்டம் நடத்த இருக்கின்றனர்.

இது பற்றி சேலம் …

33 வயது பெண் ஒருவர் கட்டாய கருக்கலைப்பு தொல்லைக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் டெல்லியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென் கிழக்கு டெல்லியின் ஜீதாபூர் என்ற பகுதியில் அரங்கேறிய சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறுகையில், ”உயிரிழந்த பெண் கடந்த 8 ஆண்டுகளாகவே கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். பின்னர் இவருக்கு மென்பொருள் பொறியாளர் …

டெல்லி பல்கலை கழகத்திற்கு உட்பட்ட தொழில்முறை படிப்புகளுக்கான கல்லூரியில் (சி.வி.எஸ்.) அசிஸ்டன்ட் ப்ரொபசராக வேலை செய்பவர் மன்மோகன் பாசின். இவருடன் வேலை பார்க்கும் பெண் ப்ரொபசர்கள் பலர் அளித்த பாலியல் துன்புறுத்தல் புகாரின் அடிப்படையில் மன்மோகன் பாசினை சஸ்பெண்டு செய்ய டெல்லி பல்கலை கழகத்தின் வைஸ் ப்ரெசிடெண்ட் யோகேஷ் சிங் அனுமதி அளித்துள்ளார்.

இது தொடர்பான …

நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகளை வெளியிடும்போது, என்ன வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும் என்பதையும் வெளியிட வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

அரியலூர் மாவட்டம், அங்கனூர் கிராமத்தில் விசிக தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவனின் தந்தையின் நினைவு நாளை ஒட்டி அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அப்போது, செய்தியாளர்களை சந்தித்து திருமாவளவன் பேசுகையில், “நாடாளுமன்றத்தில் …

கோவையில் ஒரு பிரைவேட் மில்லில் வேலை செய்யும் சிறுவன் ஒருவன், நேற்று முன் தினம் விடுமுறைக்காக தன் சொந்த ஊரான தூத்துக்குடிக்கு செல்ல, கோவையிலிருந்து தூத்துக்குடிக்கு பஸ் இல்லாததால் திண்டுக்கலுக்கு வந்துள்ளார். திண்டுக்கல் வந்து பஸ்ஸுக்காக காத்திருந்தபோது, கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர், அந்த சிறுவனிடம் வந்து காலையிலிருந்து எதுவும் சாப்பிடவில்லை …

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் ரத்து செய்யப்படவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை வேளச்சேரியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் பிறந்தநாள் விழாவில் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அதிகாரிகள் காகர்லா உஷா, நந்தகுமார், அறிவொளி, எம்.எல்.ஏ., …

இலங்கையில் குடும்ப ஆட்சி நடத்திய ராஜபக்சே குடும்பத்தினர் எப்படி நாட்டை விட்டு சென்றுள்ளார்களோ, அதேபோல் விரைவில் இந்த திமுகவினரும் செல்வார்கள் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பின் முதல்முறையாக கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை வருகை தந்துள்ளார். அவரை கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட …