பழம்பெரும் தெலுங்கு நடிகர் திரு யு.வி. கிருஷ்ணம் ராஜுவின் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்; யு.வி. கிருஷ்ணம் ராஜுவின் மறைவை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். திரைப்படத்துறை சம்பந்தமான அவரது அறிவுக்கூர்மை மற்றும் படைப்பாற்றலை எதிர்கால தலைமுறை என்றும் நினைவில் கொள்ளும். …