fbpx

நான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் குடியுரிமை திருத்தச்சட்டம் அமல்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வேன்’ என யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார். இதையடுத்து, நாடு முழுவதும் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அரசியல் கட்சி தலைவர்களிடம் ஆதரவு அளிக்கும்படி பிரச்சாரம் செய்து வருகிறார். அந்த வகையில், அசாம் …

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான பிறகு, இளங்கலைப் படிப்புகளில் சேர்வதற்கான காலக்கெடுவை நிர்ணயிக்குமாறு பல்கலைக்கழக மானியக் குழு கேட்டுக் கொண்டுள்ளது என்று தலைவர் ஜெகதேஷ் குமார் தெரிவித்தார்.

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு முடிவுகளை அறிவிக்கவில்லை என்றாலும், சில பல்கலைக்கழகங்கள் தங்கள் சேர்க்கை செயல்முறையைத் தொடங்கியுள்ளன. இந்நிலையில் “சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு …

மணிப்பூர் மாநிலத்தில் கொரோனா வழக்குகள் கடுமையாக அதிகரித்து வருவதால், உடனடியாக அமலுக்கு வரும் வகையில் பள்ளிகளை மூடுவதற்கான உத்தரவை மாநில அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது.

இது குறித்து கல்வித்துறை ஆணையர் எச்.கியான் பிரகாஷ் தனது உத்தரவில்; மாநிலத்தில் கடந்த சில நாட்களாக வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனாவுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சோதனை …

நாளை முதல் 75 நாட்களுக்கு 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து குடிமக்களுக்கும் கொரோனா தடுப்பூசிகளின் இலவச பூஸ்டர் மருந்துகள் அரசு தடுப்பூசி மையங்களில் நாளை முதல் 75 நாட்களுக்கு கிடைக்கும் …

கூகுள் மேப்பை நம்பி இரவு நேரத்தில் காரில் பயணித்த குடும்பத்தினர், தண்ணீர் நிறைந்த வயலில் காரை பார்க்கிங் செய்த சம்பவம் கேரளாவில் அரங்கேறியுள்ளது.

கேரள மாநிலம் மலப்புரத்தில் உள்ள திரூரைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் பொன்முண்டாவில் இருந்து புதுப்பரம் நோக்கி காரில் பயணம் சென்று கொண்டிருந்தனர். அப்போது, பாலசித்ரா மலைப்பாதை வழியாக சென்றால் சீக்கிரமாக சென்றுவிடலாம் …

கேரளாவில், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆட்சேர்ப்பு நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள மூன்று பேரும் குற்றவாளிகள் என என்.ஐ.ஏ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கேரள மாநிலம் வலப்பட்டினத்திலிருந்து பதினைந்துக்கும் மேற்பட்ட இளைஞர்களை சிரியாவுக்கு அழைத்துச் சென்று ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்த்ததாக மூன்று பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வந்த கொச்சி என்.ஐ.ஏ …

நீட் இளநிலை தேர்வை ஒத்திவைக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

எம்.பி.பி.எஸ் / பி.டி.எஸ் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.. நாடு முழுவதும் உள்ள தனியார், அரசு மருத்துவ கல்லூரிகள் மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்பையில் மாணவர் …

சமீபத்தில் சிக்கிம் மாநிலத்தில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியின் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆசிட் ஈ அல்லது நைரோபி ஈ என்ற பூச்சியால் ஏற்படும் கடுமையான தோல் நோய்த்தொற்றுகளால் பாதிக்கப்பட்டனர். நைரோபி ஈ பூச்சி தொற்றால் பாதிக்கப்பட்ட ஒரு மாணவரின் கையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.. அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட மற்ற மாணவர்களுக்கு …

விலைவாசி உயர்வால் தத்தளிக்கும் சாமானிய மக்களுக்கு பெரும் நிவாரணமாக, ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஆண்டுதோறும் இலவச எல்பிஜி சிலிண்டர்களை அரசு அறிவித்துள்ளது. தகுதியுடையவர்கள் ஒரு வருடத்தில் 3 எல்பிஜி சிலிண்டர்களை இலவசமாகப் பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.. உத்தரகாண்ட் அரசு இந்த ஆண்டு மே மாதம் அந்தியோதயா அட்டை வைத்திருப்பவர்களுக்கு மூன்று இலவச எல்பிஜி சிலிண்டர்களை வழங்க முடிவு …

கூகுள் தனது ப்ளே ஸ்டோரில் இருந்து 4 ஆண்ட்ராய்டு செயலிகளை தடை செய்துள்ளது. தடைசெய்யப்பட்ட செயலிகள் பயனர்களிடையே மிகவும் பிரபலமாக இருந்தன, அவை மொத்தம் 100,000 முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், இந்த செயலிகள் ஆபத்தான தீம்பொருளைக் கொண்டுள்ளதால், பயனருக்குத் தெரியாமலேயே விலையுயர்ந்த சந்தாக்களுக்குப் பதிவுசெய்து அவர்களின் பணத்தைத் திருடலாம். எனவே பயனர்கள் உடனடியாக இந்த …