இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை குறைக்க முடிவு செய்திருப்பதாகவும், இதுதொடர்பான அறிவிப்பு ஜூன் 6ஆம் தேதி வெளியாகலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியால், வணிக வங்கிகளுக்கு நிதிக்கான வட்டி நிர்ணயம் செய்யப்படும். இதைத்தான் ரெப்போ விகிதம் என்று அழைக்கிறோம். இதை வைத்துதான் வங்கிகள் தாங்கள் அளிக்கும் கடன்களுக்கான வட்டியை நிர்ணயிக்கும். இந்த விகிதம் உயர்ந்தால் வட்டியும் உயரும், கட்ட வேண்டிய தொகையும் உயரும். இந்தாண்டில் […]

திருநங்கை தம்பதியினரின் குழந்தையின் பிறப்புச் சான்றிதழில், ‘பெற்றோர்’ என குறிப்பிட்டால் போதும் என்று கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மாற்று பாலினத்தவர்கள் சாதாரண வாழ்க்கையை வாழ்வதற்கே பல போராட்டங்களை சந்தித்து வருகின்றனர். ஒரு குடும்பமாக வாழ விரும்பினாலும், இதில் யார் கணவன்..? யார் மனைவி..? என்கிற கேள்வி எழுகிறது. அதையும் தாண்டி, குழந்தையை தத்தெடுத்து வளர்த்தாலும் கேள்வி எழுகிறது. பாலினங்களில் இரண்டு மட்டுமே இல்லை என்றும் அதை தாண்டி பல பாலினங்கள் […]

நடிகர் விஜய்யின் ’தமிழன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் பிரியங்கா சோப்ரா. இவர், சினிமாவில் புகழின் உச்சத்தில் இருக்கும்போதே அமெரிக்கா பாடகர் லிக் ஜோனாஸை மணந்தார். இப்போது அமெரிக்காவில் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். பிரியங்கா சோப்ரா, ஒரு பேட்டியில் கலந்து கொண்டபோது, பாலின எதிர்ப்புகள் மற்றும் நவீன உறவுகள் பற்றி பேசியிருந்தார். இதுதொடர்பான அந்த பேட்டியில், “எந்த ஆணும் தனது மனைவி கன்னியாக இருக்க வேண்டும் […]

சினிமாவில் ஒரு நடிகரால் ஒரே படத்தில் பல கதாபாத்திரங்களில் நடிக்க முடியும். பெரும்பாலும் இரட்டை வேடங்களில் நடிப்பார்கள். ஆனால், குறிப்பிட்ட சில நடிகர்கள் மட்டுமே இரண்டுக்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களில் நடிப்பார்கள். அந்த வகையில், நடிகர் கமல்ஹாசன் ‘தசாவதாரம்’ படத்தில் 10 கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியிருப்பார். அதற்கு முன்னதாக ‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்தில் 4 கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். திரையுலகில் பல புதுமைகளை நிகழ்த்திக் கொண்டே இருக்கிறார் கமல்ஹாசன். அவருக்கு அடுத்ததாக […]

பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா அதிரடி நடவடிக்கைகளை எடுத்தது. இதில் குறிப்பாக சிந்து நதி நீர் ஒப்பந்ததம் ரத்து அமைந்து இருந்தது. பாகிஸ்தானின் 80 சதவீத விவசாயம் சிந்து நதி நீரை நம்பியிருப்பதால், இந்தியா அந்த நீரை நிறுத்த எடுத்து இருக்கும் முடிவு பாகிஸ்தானுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே பாகிஸ்தானுக்கு ஆதரவாகச் சீனா இப்போது சில கருத்துகளைத் தெரிவித்துள்ளது. பீஜிங்கில் உள்ள சீனா மற்றும் உலகமயமாக்கல் […]

மணிப்பூர் மாநிலத்தில் தற்போது ஜனாதிபதி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆனால், இங்கு மீண்டும் ஆட்சி அமைக்க பாஜக முயற்சித்து வருகிறது. தற்போதைக்கு தனக்கு 44 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக ஆளுநா் அஜய்குமாா் பல்லாவை சந்தித்து பாஜக எம்எல்ஏ தோக்சோம் ராதேஷாம் சிங் கூறியுள்ளார். இந்த சூழலில் தான், மணிப்பூரில் மீண்டும் ஒரு பூகம்பம் வெடித்துள்ளது. அதாவது, பாரதிய ஜனதா கட்சியின் பெண் தலைவரின் மகனின் 130 ஆபாச வீடியோக்கள் தொடர்பான […]

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை பற்றி 33 நாடுகளுக்கு எடுத்துரைப்பதற்காக சென்ற பல்வேறு கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகளின் குழு அடுத்த வாரம் பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளனர். கடந்த ஏப்ரல் 22-ந்தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் சுற்றுலாத் தளத்தில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். இதில் 26 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த தாக்குதலுக்கு தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்துடன் […]

டிஜிட்டல் இணைப்பு விதிமுறைகளுக்கான சொத்துக்களின் மதிப்பீடு, 2024” இன் கீழ் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் சம்பந்தப்பட்ட பங்குதாரர்கள் கருத்துகளைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்; டிஜிட்டல் இணைப்பு விதிமுறைகளுக்கான சொத்துக்களின் மதிப்பீடு, 2024” இன் கீழ் டிஜிட்டல் இணைப்புக்கான சொத்துக்களின் மதிப்பீட்டை மதிப்பிடுவதற்கான ‘வரைவு கையேட்டை’ இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் 2025 மே 13 அன்று வெளியிட்டது. இதுகுறித்த பங்குதாரர்களின் […]

ஜூன் 15ம் தேதி நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு”-தேசிய தேர்வுகள் வாரியம் அறிவிப்பு. தேர்வை ஒரே கட்டமாக நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் அதற்கான ஏற்பாடுகளை செய்வதற்காக ஒத்திவைப்பு. நாடு முழுவதும் எம்டி, எம்எஸ், முதுநிலை டிப்ளாமோ படிப்புகளுக்கு 2025-26-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான ஜூன் 15-ம் தேதி நடைபெற இருந்த நீட் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது கடந்த ஏப்ரல் 13-ம் தேதி தொடங்கி கடந்த […]