காமக் கொடூரன் காசியிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியான நிலையில், அவரது நண்பர் தினேஷ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் காசி. 26 வயதான இவர் பார்ப்பதற்கு மிகவும் ஸ்டைலாக, சினிமா ஹீரோ போல இருக்கிறார். ஆனால் இவர் மீது காவல்நிலையத்தில் அளிக்கப்பட்டு வரும் தொடர் புகார்கள், காசி எத்தகைய காமக் கொடூரன் என்பதை உலகிற்கு காட்டியது.
கந்துவட்டி, பாலியல் பலாத்காரம், போக்சோ, நிலஆக்கிரமிப்பு என 6 கேஸ்கள் இதுவரை காசி மீது பதிவாகி உள்ள நிலையில், அவர் மீது குண்டர் சட்டமும் பாயந்துள்ளது. இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், அவர்கள் காசியிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுதொடர்பாக காசியின் நண்பர் ஜுனோ என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் காசியின் வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில், மெமரி கார்டுகள், 3 செல்போன்கள், சில முக்கிய ஆவணங்கள் காசியின் ரூமில் இருந்துள்ளது. காசி மற்றும் அவரது நண்பரின் நடத்திய விசாரணையில், இதில் மேலும் விஐபிகளுக்கும் தொடர்பு இருப்பதாக சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய காமக்கொடூரன் காசியின் வழக்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த வழக்கில் அவரது நண்பர் தினேஷ் என்பவரை சிபிசிஐ போலீசார் கைது செய்துள்ளனர். காசியை போலவே, தினேஷின் செல்போனிலிருந்து படங்கள், வீடியோ காட்சிகள் சிக்கியுள்ளன.காசி பயன்படுத்திய பெண்களின் செல்போன் எண்கள் எடுத்த தினேஷ், காசியை போல் பெண்களை தொடர்பு கொண்டு, உருக்கமாக பேசி காதலிப்பது போல் நடித்துள்ளார்.

காசியோடு தொடர்புடைய பெண்களை, தன் வலையில் இப்படி தான் வீழ்த்தியுள்ளார் தினேஷ். பெண்கள் அவரது பேச்சில் ஏமாந்து காதலிக்க தொடங்கியவுடன், தனது வேலையைக் காட்ட தொடங்கியுள்ளார்.

காதல் என்ற பெயரில், பெண்களை காம இச்சைக்கு பயன்படுத்தியதும், அதனை வீடியோ, புகைப்படங்களாக எடுத்து அதனை காட்டி மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்துள்ளதும் தெரியவந்துள்ளது. காசியின் காமலீலை தமிழகம் முழுவதும் ஏற்படுத்திய அதிர்வலைகள் அடங்குவதற்குள் தற்போது அவரது நண்பரின் தினேஷின் கைது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.