“விவசாயிகளுக்கு வழங்கப்படும் மரண தண்டனை..” வேளாண் மசோதாக்களுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு அமெரிக்க தேர்தலில் போட்டியிடும் ஜோ பைடனும் தமிழ்நாட்டுகாரர் தானாம்..! உயிர் பிரிந்த அந்த ஓர் நொடி…! அண்ணன் தங்கை இருவரும் ஒரே நேரத்தில் மரணம்…! எனக்கு இந்த பதவி தான் வேணும்..! அடம்பிடிக்கும் ஓபிஎஸ்..! குழப்பத்தில் ஈபிஎஸ்..! விக்ராந்த் காதலித்து திருமணம் செய்து கொண்ட அந்த பிரபல சீரியல் நடிகை யார் தெரியுமா…? "லோன் தேவையா… உங்க நம்பருக்கு ஒரு ஓடிபி வரும் அத சொல்லுங்க.." பணத்தை திருட மாத சம்பளத்தில் ஆட்கள்..! பாலியல் வன்கொடுமை செய்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட கும்பல்..! இந்தியாவில் கோவிட்-19 சோதனையை அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றி செல்லும் டாடா CRISPR…! இதனால் என்ன பயன்…? அவரு கூப்பிட்டாரு.. நானும் போனேன்..! ஆனா இப்படி பண்ணுவாருன்னு தெரியாது..! மாணவி அதிர்ச்சி வாக்குமூலம் 300க்கும் குறைவான தொழிலாளர்கள் கொண்ட நிறுவனங்கள் அரசாங்க அனுமதி இன்றி…. ரஜினி பட வசனத்தை போட்டு ட்வீட் போட்ட இம்ரான் தாஹிர்.. "இன்னும் தரமான சம்பவம் காத்திட்டுருக்கு" கிணத்த காணோம் குளத்த காணோம்னு சொன்னீங்க..! இப்போ ஒரு ரயிலையே காணமே..! ஐபிஎல் வரலாற்றில் 100 போட்டிகளை வென்ற ஒரே கேப்டன் தோனி… மேலும் ஒரு சாதனை இருக்கு… கொரோனா சிறப்பு ரயிலில் பயணித்ததால் நடந்த விபரீதம்..! அடுத்தடுத்து நிகழ்ந்த மரணம்..! பார்வை இல்லாதவர்களுக்கு மீண்டும் பார்வை கொடுக்கும் ஒரு அற்புத கண்டுபிடிப்பு..! இனி அவர்களும் உலகை பார்க்கலாம்..!

நீளும் பட்டியல்..அடுத்தடுத்து சீனாவிற்கு குவியும் தடைகள்..மத்திய அரசு தடாலடி

செல்போன் செயலிகளை தொடர்ந்து சீனாவின் உணவுப் பொருட்கள், கட்டுமான பணி, தொலை தொடர்பு சாதனங்கள் ஆகியவை தொடர்பான ஒப்பந்தங்களையும் முறித்துக் கொள்ளும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

மே 31-க்கு பிறகு

கிழக்கு லடாக் பகுதியில் சீன ராணுவத்தினர் உடன் ஏற்பட்ட மோதலில், இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து சீனா உடனான பொருளாதார உறவை குறைக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன்படி, இந்தியாவின் இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி டிக்டாக், ஷேர்இட் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு சமீபத்தில் தடை விதித்தது. அதே போன்று முடக்க வேண்டிய இதர செயலிகள், ஆபாச தளங்கள் மற்றும் சீனாவின் பல இணைய தளங்களின் பட்டியலையும் தொலைத் தொடர்பு அமைச்சகம் தயாரித்து வருகிறது. இந்தியா விதித்துள்ள தடை, சீனாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களான அலிபாபா, லெனோவா, ஜியோமி உள்ளிட்டவற்றுக்கு பின்னடைவை ஏற்படுத்துவதுடன், கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பை ஏற்படுத்தும் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.

tiktok 660

இதைதொடர்ந்து, தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களில் சீன நிறுவனங்களை அனுமதிக்கப் போவதில்லை என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். சிறு குறு நடுத்தரத் தொழில் நிறுவனங்களில் சீனாவின் முதலீடு இல்லை என்பதை அரசு உறுதிப்படுத்தும் எனவும், தேசிய நெடுஞ்சாலைத் திட்டப் பணிகளில் கூட்டு நிறுவனங்கள் மூலமும் சீன நிறுவனங்கள் பங்கேற்பதை அனுமதிக்கப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இதேபோல், சீன தயாரிப்புகளுக்கான கதவை தனது அமைச்சகம் மூடியுள்ளதாக மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார். எந்தவொரு சீனப் பொருட்களும் இனி தனது துறைக்கு வராது என்றும், இது குறித்த சுற்றறிக்கை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது என்றும் பாஸ்வான் கூறியுள்ளார்.

nithin gadkari

பொதுத்துறை தொலைதொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல்-ன் சேவையை, 4ஜிக்கு மேம்படுத்தும் பணிக்கான டெண்டர் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இந்திய-சீன ராணுவத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, பி.எஸ்.என்.எல்-ன் மேம்பாட்டு பணியில் சீன பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது. அதைதொடர்ந்து தற்போது, சுமார் 8 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டரை, தொலைதொடர்புத்துறை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, மேம்படுத்துதல் பணிக்கான தேவையை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ஆறு பேர் கொண்ட குழு அதன் அறிக்கையை சமர்ப்பித்த பிறகு, இந்திய நிறுவனங்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில் இரண்டு வாரங்களில் புதிய டெண்டர் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

1newsnationuser4

Next Post

மூக்கிரட்டை கீரை பற்றி தெரியுமா?

Thu Jul 2 , 2020
நம் முன்னேர்கள் இயற்கை மருத்துவத்தையே சார்ந்திருந்தனர். அதனால் எந்த காய்கறியில் என்ன சத்து உள்ளது எந்த பழத்தில் என்ன விட்டமின் உள்ளது எந்த கீரை எந்த நோயை குணப்படுத்தும் என்பது எந்த பள்ளியும் கற்று தரவில்லை என்றாலும் அவர்களுக்கு அது அத்துப்படி. இது போன்று அவர்கள் அறிந்து வைத்த, நாம் நாளடைவில் மறந்து போன ஒன்று தான் இந்த மூக்கிரட்டை கீரை. இது தரையில் படரும் கொடி வகையை சேர்ந்தது. […]
1578050459 311

You May Like