தங்கத்தில் பாதுகாப்பான முதலீடு செய்ய வேண்டுமா?…முழுவிபரம் இதோ! பொதுத்தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…! இதிலிருந்து தான் பல கேள்விகள் கேட்கப்படும்..! இந்தியாவில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்…மத்திய அமைச்சர் அறிவிப்பு! முன் அனுபவம் தேவையில்லை..! நல்ல வேலை வாய்ப்பு..! உடனே அப்ளே பண்ணுங்க..! இரு மனைவியுடன் உல்லாசமாக இருப்பதை லைவ் டெலிகாஸ்ட் செய்த நபர்..! ரூ.100 கட்டணம் வசூல்..! கனமழை வெளுத்து வாங்கப் போகும் 4 மாவட்டங்கள் இவைதான்.. அலர்ட்டா இருந்துகோங்க.. உங்கள் சானிடைசர் ஒரிஜினல் தானா என்பதை எப்படி கண்டறிவது..? எளிய வழிகள் இதோ.. வண்டியில் செல்லும் பெண்களே கவனம்..! பரிதாபமாக உயிரிழந்த பெண்..! பாஜகவில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்…! இன்ப அதிர்ச்சியில் பாஜக…! பாதியில் நிறுத்தப்படும் பிரபல சீரியல்..! சன் டிவிக்கு வந்த திடீர் சிக்கல்..! கொரோனாவையும் பரப்புவாங்களாம்.. நிரூபிக்கப்படாத தடுப்பூசியை விற்பாங்களாம்.. தொடரும் சீனாவின் அட்டூழியம்.. SBI வாடிக்கையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி..! நீங்களே உங்கள் வங்கி கிளையை ஆன்லைன் மூலம் மாற்றலாம்..! பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் நாய்..! 'அந்த' உறுப்பிலிருந்து 11 இன்ச் குச்சி அகற்றம்..! “ஏர் ஓட்டுறவனும் ஏரோபிளேன்ல போவான்..” சூரரை போற்று ட்ரெய்லர் வெளியீடு.. புதிய ரிலீஸ் தேதியும் அறிவிப்பு.. சூர்யாவின் "சூரரைப் போற்று" ட்ரெய்லர் வெளியானது..! நவம்பர் 12ஆம் தேதி படம் வெளியாகிறது..!

மத்திய அரசு கொண்டு வந்த விவசாய மசோதாக்கள் பயனளிக்குமா..? பாதகமாகுமா…?

சமீபத்தில் நாடாளுமன்ற மக்களவையில் மத்திய அரசு சார்ப்பில் நிறைவேற்றப்பட்ட 3 மசோதாக்களுக்கு எதிர்கட்சியினர் உட்பட பலர் எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். குறிப்பாக பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களில் உள்ள விவசாயிகளும் கடுமையாக இதனை எதிர்த்தனர். இதில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஷிரோமணி அகாலி தளம் கட்சியின் ஹர்சிம்ரத் கவுர் பாதல் தனது மத்திய அமைச்சர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். எதற்கு இவ்வளவு எதிர்ப்புகள் இந்த மசொதக்களுக்கு…

16e7b41b 5445 4f2e 9a0e e1c4b95e4c46

மொத்தம் மூன்று சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

  • அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020
  • விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020
  • விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020.

முதலில் உள்ள அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டத்தை எடுத்துக் கொள்வோம். இதுவரை இந்தியாவில் வெங்காயம், பருப்பு போன்ற பொருட்களின் விலை உயரும்போது அவற்றை ஏற்றுமதி செய்யவும் சேமித்து வைக்கவும் அரசு சில கட்டுப்பாடுகளை தேவைக்கேற்ற விதித்து வருகிறது. ஆனால் இப்போது வந்துள்ள சட்டத் திருத்தத்தின்படி இந்த மாதிரி கட்டுப்பாடுகளை சில சூழ்நிலையில் மட்டும் தான் விதிக்க வேண்டும். அதாவது, தோட்டப் பயிர்களைப் பொறுத்தவரை அவற்றின் விலை கடந்த ஒரு வருடத்தின் சராசரி விலையை விட 100 சதவீதம் அதிகரித்து இருக்க வேண்டும். பயிர் தானியங்களைப் பொருத்தவரை, கடந்த ஐந்து ஆண்டுகளின் மொத்த சராசரி விலையை விட 50 சதவீதம் அதிகரிக்க வேண்டும். இது போன்று அதிகரித்தாலும் இந்தக் கட்டுப்பாடு உணவுப் பொருட்களைப் பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு பொருந்தாது.

விளைபொருட்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளே விற்பனை குறித்த அதிகாரத்தை முழுமையாக எடுத்துக் கொள்ள முடியும், இதனால் விவசாயிகளுக்கு முழு சுதந்திரம் கிடைக்கும், விவசாய துறையின் பொருளாதாரம் மேம்பட்டு, அந்நிய முதலீடு கிடைக்கும் என்பது மத்திய அரசின் வாதம்.

அடுத்தது இரண்டாவதாக உள்ள விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டத்தின் மூலம் விவசாய விளை பொருட்களை மாநிலத்திற்கு உள்ளேயும் வெளி மாநிலங்களிலும் எந்த இடத்திலும் சந்தைப்படுத்த முடியும். இதனால், விவசாயிகளுக்கு உற்பத்தி பொருட்களுக்குக் கூடுதல் விலை கிடைக்குமென மத்திய அரசு கூறுகிறது. ஆனால், விவசாய வர்த்தகத்தின் மீது மாநில அரசு கொண்டிருக்கும் கட்டுப்பாட்டை இந்த சட்டம் உடைக்கிறது. மாநிலத்தில் ஏற்படும் உணவு தட்டுபாட்டை மாநில அரசால் ஒன்றும் செய்ய முடியாது என்ற அச்சம் ஏற்ப்படுகிறது.

இறுதியாக உள்ள சட்டம், விலை உத்தரவாதம், விவசாய சேவைகள் ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020. விவசாயிகளுடன் எந்த மூன்றாவது நபரும் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொள்ள இந்தச் சட்டம் வழிவகுக்கிறது. அதாவது அந்நிய முதலீட்டை வழிவகுக்கிறது. இன்னும் சுருக்கமாகச் சொன்னால், விவசாய இடைத்தரகர்கள் இந்தச் சட்டத்தின் மூலம் சட்டரீதியான பாதுகாப்பு கிடைக்கும்.

மத்திய அரசின் நிலைப்பாடு இந்த மூன்று சட்டங்கள் மூலமும் விவசாயிகள் தங்கள் விளைவித்த பொருட்களுக்கு தங்கள் விலை நிர்ணயம் பண்ண முடியும், கூடுதலான சந்தை வாய்ப்புகள் கிடைக்கும், நுகர்வோருடன் வர்த்தகர்களும் பயனடைவார்கள் என கூறுகிறது.

ce392e245b35d993a6560f4532427c38d6a0b23a956d8afa287efbf37034da1f

எதிர் வாதங்கள்:

இந்தியாவில் விவசாயம் என்பது மாநில அரசின் கீழ் உள்ளது. மாநில அரசின் அதிகாரத்தை இந்த சட்டங்கள் சீர்குலைக்கிறது. மேலும், பெரிய விதை நிறுவனங்கள், கான்ட்ராக்ட் விவசாய நிறுவனங்கள், மிகப் பெரிய சங்கிலித் தொடர் சூப்பர் மார்க்கெட்களுக்கு சாதகமாக இந்த சட்டம் அமைகிறது. விவசாய ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களுக்கு வெளியிலும் விவசாயப் பொருட்களை விற்பனை செய்ய இந்தச் சட்டம் அனுமதிப்பது பல மாநிலங்களில் எதிர்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழ்நாட்டில் விவசாய ஒழுங்குமுறை விற்பனைக் கூடம்:

விவசாய ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் என்பது தமிழ்நாட்டில் வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறையின் கீழ் இயங்கிவரும் விற்பனைக் கூடங்களைக் குறிக்கிறது. விவசாயத்தின் மூலம் உற்பத்தியாகும் பொருட்களை வாங்கவும் விற்கவும் முறைப்படுத்தவும் 1987ஆம் ஆண்டு தமிழ்நாடு அராசல் உருவாக்கப்பட்டது. தமிழ்நாட்டில் 268 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களும் 108 கிராமப்புற சேமிப்பு கிடங்குகளும் 108 தரம்பிரிக்கும் மையங்களும் செயல்பட்டுவருகின்றன.

நிலக்கடலை, புளி, எள், கரும்பு வெல்லம், நெல், பருத்தி, கேழ்வரகு, கம்பு, சோளம், வரகு, கொள்ளு, ஆமணக்கு, தேங்காய், மரவள்ளிக்கிழங்கு, உருளைக்கிழங்கு, துவரம் பருப்பு போன்ற பொருட்கள் ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த ஏலம் நடக்கும்போது விவசாயி, வர்த்தகர், வேளாண்துறை அதிகாரி ஆகியோர் இருப்பார்கள்.

இது போன்ற வேளாண் ஒழுங்கு முறை விற்பனைக் கூட முறையானது தமிழ்நாட்டைவிட, மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மிகவும் கட்டுப்பாட்டுடன் செயல்படுத்தப்படுகிறது. விவசாயிகளிடம் இருந்து விளைபொருட்களை பெற்று, மறுபடி விற்கும் வர்த்தகர்களுக்கு பொருளின் மதிப்பில் 1-2 சதவீதம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால் தற்போது கொண்டுவரப்பட்டுள்ள சட்டத்தின் படி விவசாயிகள் விற்பனை கூடத்திற்கு வெளியிலும் பொருட்களை விற்கலாம் என அனுமதி அளிக்கப்படும்.

மற்றொரு சட்டத்தின்படி விவசாயிகள் நேராடியாக பெரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு விளைபொருட்களை விநியோகம் செய்யலாம். ஆனால் பணம் தருவதில் ஏதும் பிரச்சனை ஏற்பட்டால் ஒரு ஏழை விவசாயி பெரிய நிறுவனத்தை எதிர்த்து வழக்கு தொடுப்பது, வழக்கில் வெல்வது நடைமுறையில் சாத்தியமா..? இத்தகைய நடைமுறை தான் தற்போது கரும்பு விவசாயிகளுக்கும் சர்க்கரை ஆலைகளுக்கும் இடையே நம் கண்முன்னே நடந்து வருகிறது.

அதே போன்று பெரிய பெரிய சூப்பர் மார்கெட் நிறுவனங்கள் தேவையான உணவு பொருட்களை பதுக்குவதில் சில கட்டுப்பாடுகள் தற்போது இருக்கிறது. இதனை களையவே பெரிய கார்பரேட் நிறுவனங்களுக்கு சாதாகமாக இந்த சட்டம் உள்ளதாக பார்க்கப்படுகிறது. இது தவிர ஆதார விலை வழங்குவது குறித்து எந்த உறுதிப்பாடும் அளிக்கப்படவில்லை என சிலர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

தற்போது மக்களவையில் நிறைவேற்றப்பட்ட இந்த மூன்று சட்டங்கள் மாநிலங்களவையில் விவாதிக்கப்படவிருக்கிறது. அங்கும் அவரை நிறைவேற்றப்பட்டுவிட்டால் அடுத்ததாக குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு பிறகு இந்த சட்டம் செயல்வடிவம் பெறும். இதனால் தான் பல விவசாயிகள் உடனடி போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

1newsnationuser5

Next Post

உங்க மொபைல் போனை ரீப்பேர் செய்ய கொடுக்க போறீங்களா..? அப்ப மறக்காம இந்த விஷயங்களை முதலில் செய்யுங்க..

Sun Sep 20 , 2020
பொதுவாக தங்கள் மொபைல் போனில் ஏதேனும் குறைபாடு இருந்தால், மக்கள் அதை சர்வீஸ் செண்டரில் கொடுத்த சரிசெய்வார்கள்.. சில நேரங்களில், போனில் ஒரு பெரிய சிக்கல் ஏற்படும் போது, அவர்கள் அந்த கடைகளிலேயே சில நாட்கள் போனை கொடுக்க வேண்டியிருக்கும். இதுபோன்ற சூழ்நிலையில், சிலர் தங்கள் மொபைல் போன்களை அத்தகைய சேவை மையத்தில் அவசரமாக விட்டுவிட்டு பின்னர் வருத்தப்படுகிறார்கள். எனவே, தங்கள் போனை சரிசெய்ய கொடுப்பதற்கு முன்பு ஒரு சில […]
மொபைல்

You May Like