ரஜினி தோற்றால், அது எப்படி மக்களின் தோல்வியாகும்..? சர்ச்சையை ஏற்படுத்திய ரஜினியின் கருத்து.. "டொனால்ட் டிரம்ப் தான் என்னோட அப்பா" பாகிஸ்தானி பெண்ணின் வீடியோ..! டிசம்பர் 21 வானில் தோன்றும் கிறிஸ்மஸ் நட்சத்திரம்..! 800 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றும் அதிசயம்..! 1 மில்லியன் டாலர் மதிப்புள்ள உலகளாவிய ஆசிரியர் பரிசு 2020ஐ வென்ற இந்தியர்..! 25 ஆண்டுகளை கடந்தும் நீங்காத மர்மம்.. சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டது ஏன்..? புரவி புயலின் அடுத்த மூவ்..! 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! தம்பியுடன் கள்ளக்காதல்..! கணவன் செய்த வெறிச்செயலால் தூக்கில் தொங்கிய மனைவி..! நடிகர் ஜெயசங்கரின் மகனா இது..! தந்தையை போலவே மகனும்..! பிக்பாஸ் சீசன் 4 எவிக்ஷன்: இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தான்..! கொஞ்சம் ஸ்பேஸ் கொடுத்திருக்கலாம்.! படிக்கும் இடத்தில் வயசு கோளாறு..! சக மாணவர்கள் முன்னிலையில் அரங்கேறிய அசிங்கம்..! பல ஆண்களுடன் தொடர்பு..! கத்தியால் குத்திய இரண்டாவது கணவன்..! காதலன் கணவனாகும் தருணத்தில் மரணம்..! அதிர்ச்சியில் காதலி செய்த காரியம்..! ஆய்வகத்தில் உருவாகும் செயற்கை கோழிக்கறி விற்பனை..! அனுமதி அளித்த முதல் நாடு..! ரூ.11,000 முன்பதிவில் மேக்னைட் எஸ்யூவி..! டிசம்பர் 31 வரை அதிரடி விலை சலுகைகள்..! இந்தியாவில் இரு வேறு இடங்களில் அடுத்தடுத்து நில அதிர்வு

கொரோனா பாதித்த இடங்களை 3 நிறங்களை கொண்டு பிரிக்கிறது மத்திய அரசு.. எந்த நிறத்திற்கு என்ன கட்டுப்பாடு..?

கொரோனா பாதித்த இடங்களை சிவப்பு, பச்சை, ஆரஞ்சு ஆகிய மூன்று நிறங்களை கொண்டு அடையாளப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

central govt

கொரோனா பரவுதலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நடவடிக்கை காரணமாக பல்வேறு முறைசாரா தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தினை இழந்துள்ளனர். நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதாரமும் முடங்கியுள்ளது. பொது மற்றும் தனியார் போக்குவரத்து சேவைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சமூக விலகலை கடைபிடிக்கும் விதமாக இந்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும் கூட, கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறதே தவிர குறைந்தபாடில்லை. இதுவரை 8000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஊரடங்கு வரும் ஏப்ரல் 14-ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், அதனை மேலும் நீட்டிக்கவே அதிக வாய்ப்புள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஊரடங்கு தொடர்ந்தால் கூட, இம்முறை வேறு மாதிரியான தடை உத்தரவுகளை அரசு பிறப்பிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக கொரோனா தொற்று பாதித்த இடங்களைச் சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை நிறங்களைக் கொண்டு அடையாளப்படுத்த அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.

chennai lockdown

இந்தியாவில் 400 நகரங்களில் கொரோனா பாதிப்பு இல்லை. எனவே இந்த நகரங்கள் பசுமை நகரங்களாக உள்ளன. அதாவது இவற்றிற்கு பச்சை நிறம் கொண்டு அடையாளப்படுத்தப்படும்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15க்கும் குறைவாக இருப்பின் அந்த நகரங்கள் ஆரஞ்சு நிறம் கொண்டு அடையாளப்படுத்தப்பட்டிருக்கும்.

மேலும், இப்பகுதிகளில் கொரோனா பரவல் இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பிறகு, பொது போக்குவரத்து சேவைகள் இங்கு அனுமதிக்கப்படும். மேலும் விவசாய விளை பொருட்கள் அறுவடை போன்ற நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்படும்.

ஒரு பகுதியில் 15-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தால், அந்த இடங்கள் சிவப்பு நிறம் கொண்டு அடையாளப்படுத்தப்படும். எனவே இங்கு எவ்வித நடவடிக்கையும் அனுமதி வழங்கப்படமாட்டாது. தொடர்ந்து தடை உத்தரவுகள் அமலில் இருக்கும்.

india corona

இப்படியாக ஊரடங்கு நடவடிக்கையிலிருந்து தளர்த்தப்படும் துறைகள் குறித்த அறிவிப்பினை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதில் உணவு பதப்படுத்துதல், விமான போக்குவரத்து, மருந்துகள், தொழில்கள், கட்டுமானம் போன்றவை அடங்கும், ஆனால் சமூக விலகல் என்பது வழக்கமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

1newsnationuser1

Next Post

ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட தெருவோர வியாபாரிகள்... ரூ.1000 நிவாரண தொகை...மாநகராட்சி அறிவிப்பு...

Sun Apr 12 , 2020
ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட தெருவோர வியாபாரிகளுக்கு ரூ.1000 நிவாரண தொகை வழங்க தங்கள் வங்கி கணக்கு விவரங்களை உடனடியாக மாநகராட்சிக்கு வழங்க வேண்டும் என கமிஷனர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்திய நிலையில், பொருளாதார ரீதியாக அனைத்து மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இதனால் தினக்கூலிகள், சிறு, குறு தொழிலாளர்கள், ஆட்டோ தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள் என பலர் பாதிப்படைந்து வருகின்றனர். கொரோனா […]
சென்னை வாசிகளுக்கு

You May Like