பெண் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்களுக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை ஏற்கனவே அமல்படுத்தியுள்ளது. அந்த வகையில் மத்திய அரசின் ‘சுகன்யா சம்ரிதி யோஜனா’என்ற சிறு சேமிப்பு திட்டம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்..
பெண் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள், தங்கள் பெண் குழந்தையின் பெயரில் ஏதாவது ஒரு தபால் நிலையத்திலோ, அரசு வங்கியிலோ ஒரு வங்கிக் கணக்கை தொடங்க வேண்டும். இதற்காக வங்கியில் அல்லது தபால் அலுவலகத்தில் வழங்கப்படும் ஒரு விண்ணப்பதை பூர்த்தி செய்தால் போதும். மத்திய அரசின் சுகன்யா சம்ரிதி யோஜா திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும். அதிலிருந்து வரும் பணம் உங்கள் மகளின் எதிர்காலத்திற்கு பாதுகாப்பாக அமையும். தங்கள் பெண் குழந்தைகளை முறையாக வளர்க்க முடியாத ஏழை குடும்பங்களுக்காக மத்திய அரசு இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளது.

எனினும் இந்த திட்டத்தின் பயன்களை இலவசமாக யாரும் பெற முடியாது. தங்கள் மகளின் பெயரில் தொடங்கப்பட்ட வங்கிக்கணக்கில் மாதம் ரூ.250 செலுத்த வேண்டும். 14 ஆண்டுகளுக்கு இந்த பணத்தை உங்கள் மகளின் வங்கிக் கணக்கில் செலுத்தினால் போதும். அதன்பிறகு உங்கள் மகளுக்கு 21 வயதாகும் போது, அரசு உங்களுக்கு ரூ.6 லட்சம் பணம் வழங்கும். இந்த பணத்தின் மூலம் மகளின் திருமண செலவு அல்லது உயர் கல்வி செலவுகளை எளிதாக சமாளிக்க முடியும்.

இந்த சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், இந்த திட்டத்தின் மூலம் நீங்கள் பெறும் பணத்திற்கு, நீங்கள் எந்த விதமான வரியையும் செலுத்த வேண்டியதில்லை. ஒருவேளை உங்கள் மகள் எதேனுனும் சில காரணங்களால் இறந்துவிட்டால், அரசு உங்கள் பணத்தை வட்டியுடன் திரும்பத் தரும். ரேஷன் கார்டு, பெற்றோர்களின் ஆதார் அட்டை, இரண்டு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள் இருந்தால் போதும், இந்த திட்டத்தை தபால் நிலையம் அல்லது அரசு வங்கிகளில் தொடங்கலாம்.