“லட்சக்கணக்கான குடும்பங்கள் அழியும் பேராபத்து..” நாட்டின் பொருளாதார நிலை குறித்து ராகுல்காந்தி கருத்து.. பிரேசில் அதிபருக்கு கொரோனா பாசிட்டிவ்.. 4-வது பரிசோதனையில் தொற்று உறுதி.. மகனை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்த சித்தி..தந்தைஅதிர்ச்சி #BreakingNews : தமிழகத்தில் முதன்முறையாக ஒரே நாளில் 4,545 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் குறையும் கொரோனா பாதிப்பு.. எந்த அளவுக்கு மக்கள் ஒத்துழைக்கிறார்களோ, அந்தளவுக்கு கொரோனா பாதிப்பு குறையும் – முதல்வர் பழனிசாமி 9 முதல் 12-ம் வகுப்பு சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் 30% குறைக்க முடிவு : மத்திய அமைச்சர் தகவல் 30 கிலோ கடத்தல் தங்கம்..ஸ்கெட்ச் போட்ட அரசு அதிகாரி..மடக்கிய சுங்கத்துறை “பாலியல் வன்கொடுமை இல்லை..” திருச்சியில் எரித்துக் கொல்லப்பட்ட சிறுமியின் உடற்கூறாய்வு அறிக்கையில் தகவல்.. இந்த ‘மூலிகை மைசூர்பா’ ஒரே நாளில் கொரோனாவை குணப்படுத்துமாம்.. கோவை ஸ்வீட் கடைக்காரர் விளம்பரம்.. தமிழர் பாரம்பரியம்: கொரோனாவை எதிர்க்க உதவும் மஞ்சள் டிஸ்கள் தேமுதிக முன்னாள் எம்.எல்.ஏ மரணம்..அதிமுக இரங்கல் வானில் நேருக்கு நேர் மோதி நொறுங்கிய விமானங்கள்: அனைவரும் பலி சாத்தான்குளம் இரட்டைக் கொலை.. வழக்கு விசாரணையை ஏற்றுக்கொண்ட சிபிஐ.. விஜயகாந்தின் பழைய கம்பீர குரல் திரும்பியது – மருத்துவர் மகிழ்ச்சி மூளையை தின்னும் அமீபா நோய்..அமெரிக்கா எச்சரிக்கை

பரோட்டாவிற்கு எதுக்கு 18% ஜி.எஸ்.டி: சட்டம் தந்த விசித்திர விளக்கம்

பரோட்டாவிற்கு 18% வரி விதித்ததற்கு சட்டப்படி வழங்கப்பட்டுள்ள விளக்கம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

1592129103361 1

தமிழகம், கேரளா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் முக்கிய உணவுப் பொருளாகத் திகழ்வது பரோட்டா. இதற்கு 18 % ஜி.எஸ்.டி வரி விதித்திருப்பது சர்ச்சையாகியிருக்கிறது. ஆனால், சப்பாத்தி ரொட்டி ஆகியவற்றுக்கு 5 % மட்டுமே வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த பாகுபாடு எதற்காக என்ற கேள்வி சமூக வலைத்தளங்களில் எழுந்த நிலையில் அதற்கான பதில் வெளியாகியிருக்கிறது.

அதாவது ரெடிமேட் பரோட்டாவைச் சாப்பிடுவதற்குச் சூடு செய்ய வேண்டியிருக்கிறது. அதனால் தான் பரோட்டாவுக்கு மட்டும் 18% வரி விதிப்பு என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. கர்நாடகா மாநிலம் பெங்களூரை மையமாகக்கொண்டு செயல்பட்டு வருகிறது ஐடி ப்ரெஷ் புட் (ID Fresh Food) எனும் தனியார் நிறுவனம். இது இட்லி – தோசை மாவு, பரோட்டா, தயிர், பன்னீர் ஆகியவற்றை ரெடிமேட் உணவுப் பொருள்களாகப் பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்து வருகிறது.

இந்தத் தனியார் நிறுவனம் உணவுப் பொருள்கள் மீதான வரிவிதிப்பு குறித்து மத்திய அரசின் AAR (Authority for Advance Rulings) நிறுவனத்தில் புகார் அளித்தது. இந்தப் புகாரில், “ரொட்டி, சப்பாத்தி உள்ளிட்ட உணவுப் பொருள்களுக்கு 5 % ஜி.எஸ்.டி விதிக்கப்படும் நிலையில் பரோட்டாவுக்கு மட்டும் ஏன் 18 % ஜி.எஸ்.தி விதிக்கப்படுகிறது. இதை மாற்றியமைக்க வேண்டும்” என்று கேட்டிருந்தது. இந்த AAR நிறுவனம் ஜி.எஸ்.டி தொடர்பான புகார்களை விசாரித்து முடிவெடுக்கும் அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

1592129091849

இந்தப் புகார் குறித்து விசாரித்த AAR, “ரொட்டி, சப்பாத்தி வகையில் பரோட்டா சேராது. அதனால் ரொட்டி, சப்பாத்திக்கு விதிக்கும் 5 % வரியை விதிக்க முடியாது. விதி 1905 – ன் கீழ் வரும் அனைத்து ரொட்டி வகைகளும் முழுமையாகத் தயாரிக்கப்பட்டதாக, சமைக்கப்பட்டதாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே அதற்கு 5 % வரி விதிக்க முடியும். ஆனால், பரோட்டாவைச் சமைப்பதற்கு முன்பு சூடு செய்ய வேண்டும். அதனால் பரோட்டா மீதான வரியைக் குறைக்க முடியாது. 18 % ஜி.எஸ்.தி வரி தொடரும்” என்று கூறியிருக்கிறது.

இந்த முடிவுக்குப் பொதுமக்கள் #HandsOffParotta என்று சமூக வலைத்தளங்களில் போராட்டம் நடத்தினர். ‘ரொட்டி, சப்பாத்தி ஆகியவற்றையும் சாப்பிடுவதற்கு முன்பு சூடு செய்தால் மட்டுமே சாப்பிடமுடியும். இந்த நிலையில் பரோட்டாவுக்கு மட்டும் அதிக வரி விதித்திருப்பது பாகுபாடானது’ என்று பலர் விமர்சனம் செய்தது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser4

Next Post

இதையும் கவனிங்க.. இந்தியாவில் 50 சதவீத கொரோனா நோயாளிகள் குணமடைந்துவிட்டனர்..!

Sun Jun 14 , 2020
இந்தியாவின் கொரோனா நோயாளிகளில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துவிட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தொடர்ந்து 2-வது நாளாக இந்தியாவில் ஒரே நாளில் 11,000 பேருக்கு மேல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. எனினும் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருபவர்களை விட குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய நிலவரப்படி 1,49,348 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் நேற்று ஒரே நாளில் […]
இந்தியாவில்

You May Like