தமிழக தலைமைச் செயலாளர் க.சண்முகத்தின் பதவிக்காலத்தை 3 மாதங்கள் நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு தலைமை செயலாளராக இருந்த கிரிஜா வைத்தியநாதன் கடந்தாண்டு ஜூன் 30ம் தேதி ஓய்வு பெற்ற நிலையில், கடந்த ஜூலை 1ம் தேதியன்று புதிய தலைமைச் செயலாளராக சண்முகம் பதவியேற்றுக்கொண்டார்.
இவரை விட 6 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பரிசீலனையில் இருந்தும், நிதித்துறை செயலாளராக நீண்ட காலம் பதவி வகித்து சிறப்பாக செயல்பட்டதால், தலைமை செயலாளர் வாய்ப்பு சண்முகத்துக்கு அளிக்கப்பட்டது. இந்நிலையில், அவரது பணிக்காலம் வரும் ஜூலை 31ம் தேதியுடன் நிறைவடைய உள்ளதால், சண்முகத்தின் பணிக்காலத்தை நீட்டிக்கும்படி தமிழக அரசு மத்திய அரசுக்கு பரிந்துரை ஒன்றை அனுப்பி இருந்தது. அதன்படி, அவரது பணிக்காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.