நாடு முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு ஜூன் 30 வரை நீட்டித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கொரானா பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 25ந் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு, நான்காம் கட்டமாக வரும் 31 வரை நீட்டிக்கப்பட்டது. மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு நடவடிக்கைகளுக்கு மத்தியிலும் நாட்டில் நோய்த்தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து கொண்டே உள்ளது.

இந்நிலையில், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஜூன் 30 வரை ஊரடங்கை நீட்டித்து அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே அங்கு அனுமதி அளிக்கப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், ஜூன் 8 முதல் வழிபாட்டு தளங்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், சிவப்பு, மஞ்சள் மற்றும் பச்சை பகுதிகளில் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச விமான சேவை, மெட்ரோ ரயில் சேவை குறித்து சுழலுக்குக்கேற்ப முடிவு எடுக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் தொடரும். திரையரங்குகள், நீச்சல் குளம் உள்ளிட்டவற்றை திறப்பது குறித்து சூழலுக்கேற்ப முடிவெடுக்கலாம். மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளது