4 பெண்களை ஏமாற்றி அடிக்கடி உடலுறவு..!! விதவைகளை குறிவைத்து கும்மியடித்த காவலர்..!! சிக்கியது எப்படி..?

விதவைப் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி, அவருடன் உல்லாசமாக இருந்துவிட்டு, ரூ.7.50 லட்சம் பணத்தையும் ஏமாற்றிய காவலர் கைது செய்யப்பட்டார்.

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு அடுத்த கீழசுப்பராயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுதா (39). இவரது கணவர் இறந்துவிட்ட நிலையில், தனது இரண்டு குழந்தைகளை வளர்ப்பதற்காக காய்கறி கடை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். அந்த கடையின் ரெகுலர் கஸ்டமர் குணசேகரன் (42). இவர் காரைக்கால் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். அடிக்கடி காய்கறி கடைக்கு குணசேகரன் வந்துபோனதால், இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளது. சுதா, விதவைப் பெண் என்பதை தெரிந்து கொண்ட குணசேகரன், தானும் திருமணமாகி விவகாரத்து பெற்றவன் தான் எனக்கூறிக் கொண்டு சுதாவுடன் நெருக்கம் காட்டி திருமண ஆசையை தூண்டியுள்ளார்.

கணவனை இழந்து வாழும் தனக்கு, காவலர் கணவனாக வந்தால் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கையில் குணசேகரனை திருமணம் செய்து கொள்ள சுதாவும் ஓகே சொல்லிவிட்டார். இதனால், இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் சுதா தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி குணசேகரனிடம் வற்புறுத்தியுள்ளார். அதற்கு, தான் பெரும் கடன் சுமையில் இருப்பதாகவும், அந்த கடனை அடைத்துவிட்டால், நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என காலம் கடத்தியிருக்கிறார் குணசேகரன். இவரின் சோக கதையை கேட்டு மனம் நொந்துபோன சுதா, தனது 7 பவுன் தங்க செயினை அடமானம் வைத்தும், சுய உதவிக்குழு, வங்கிகள் மூலம் ரூ.7.50 லட்சம் வரை கடன் பெற்றும் குணசேகரனிடம் கொடுத்துள்ளார். இந்த பணத்தை வைத்து கடனை அடைத்துவிட்டு தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு குணசேகரனிடன் கூறியுள்ளார் சுதா. ஆனால், கடைசியில் சுதாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

சுதாவிடம் இருந்து பணத்தை பெற்றுக் கொண்ட குணசேகரன், நாளடைவில் அவரை வெறுக்க ஆரம்பித்துள்ளார். திருமணம் செய்துகொள்ளவும் மறுத்துவிட்டார். ஒருகட்டத்தில் சுதாவை கொலை செய்துவிடுவேன் என்றும் மிரட்டியிருக்கிறார் குணசேகரன். இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சுதா, இதுகுறித்து திருநள்ளாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், காவலர் குணசேகரனை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இதேபோல் 4 பெண்களிடம் நல்லவன் போல் பழகி, அவர்களுடன் உல்லாசமாக இருந்துவிட்டு, பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. அதுமட்டுமின்றி, இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவித்தால், ரூ. 50 ஆயிரம் லஞ்சம் தருவதாக திருநள்ளாறு போலீசாரிடம் குணசேகரன் பேரம் பேசியதாகவும் புகார் எழுந்ததுள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

Chella

Next Post

மகன் திருந்துவதற்காக சாமிக்கு மாலை போட சொன்ன தாய்..!! குடிபோதையில் தாய்க்கு மாலை போட வைத்த மகன்..!!

Fri Feb 10 , 2023
மகன் திருந்த வேண்டும் என்பதற்காக சாமிக்கு மாலை போட சொன்ன தாயை, குடிக்க பணம் கேட்டு குத்திக் கொன்ற மகன், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். சென்னை வியாசர்பாடி சாஸ்திரி நகர் 11-வது தெருவை சேர்ந்தவர் அப்புனு (50). காவலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கண்ணகி (45). இவர்களுக்கு அஜய் (எ) லூசு அஜய் (22) என்ற மகனும், அமலா என்ற மகளும் உள்ளனர். அமலா திருமணமாகி […]

You May Like